பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

ஆழ்வார்களின் ஆரா அமுது


ஒருவர் துழைந்து விடுகின்றார். நெருக்கத்தினால் இது தெரிகின்றது. இந்தப் புதியவரைத் தெரிந்து கொள்ள அந்த இருட்டிலும் மழையிலும் விளக்கு கிடைக்கவில்லை. பொய்கையாழ்வார் ஒரு விளக்கேற்றுகின்றார். இதுதான் விளக்கு: வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்யச் சுடராழி யான்அடிக்கே சூட்டினேன் சொல்மாலை இடராழி நீங்குகவே என்று.” {தகளி - அகல்; வார் - நீண்ட, வெய்ய வெப்பமான; கதிரோன் . பகலவன்; செய்ய - சிவந்த சுடராழி யான் . ஒளி வீசும் சக்கரத்தையுடையவன்; இடர் ஆழி - துன்பக்கடல்) உலகத்தை அகலாகவும், & L డ3 శ} நெய்யாகவும், கதிரவனைத் திரியாகவும் கொண்டு ஒரு விளக்கை ஏற்றி விடுகின்றார். இந்தப் பாசுரத்தின் மகிமையால் அந்த இடைகழியில் பளிச் சென்று ஏதோ ஒரு திரை விலகி எப்படியோ ஒளியும் வந்து விடுகின்றது; புறத்தே கவிந்து கிடக்கும் இருளும் நீங்கி விடுகின்றது. அதே சமயத்தில் பூதத்தாழ்வாரும் ஞான விளக்கொன்றை ஏற்றுகின்றார். அன்பே தகளியா ஆர்வமே கெய்யாக இன்புருகு சிங்தை இடுதிரியா - கன்புருகி ஞானச் சுடர்விளக் (கு) ஏற்றினேன் காரணற்கு ஞானத் தமிழ்புரிந்த நான்* (ஆர்வம் - விருப்பம்; நன்பு ஆன்மா.1 அன்பை அகலாகவும், பொங்கி வரும் ஆர்வத்தை நெய் யாகவும், சிந்தையைத் திரியாகவும் கொண்டு ஞான 3. முதல் திருவந் , ! 4. இரண். திருவந், !