பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


34 ஆழ்வார்களின் ஆரா அமுது திருக்கோவலூர் அருகில் விளையும் கரும்பாகவும், அந்த எம்பெருமானின் செளலப்பிய குணத்தைச் சாறாகவும் உருவகித்து ஒரு வடமொழிச் சுலோகத்தாலும் பாராட்டி யுள்ளார். மேற்குறிப்பிட்ட திருக்கோவலூர் நிகழ்ச்சிக்குப் பின்னர், இம்மூவரும் திருவல்லிக்கேணியில் திருமழிசை யாழ்வாரைச் சந்தித்து அளவளாவியதாக வரலாறு கூறும். இவர்கள் சங்க காலத்தினை அடுத்த காலத்தில் வாழ்ந்த, தாக வரலாந்து அறிஞர்கள் கருதுவர். இந்த மூவரும் யாவர்: பொய்கையாழ்வார் காஞ்சி மாநகரில் சொன்னவண்ணம் செய்த பெருமாள் சந்நிதியின் வடபுறத்தில் உள்ள பொற்றாமரைப் பொய்கையில் பூத்த தொரு நற்றாமரை மலரில் ஐப்பசித் திங்கள் திருவோண நட்சத்திரத்தில் திருவவதரித்தார். இவருடைய பெருமை யைக் கண்ட அனைவரும் இவரைத் தேவிற் சிறந்த திருமாலின் பாஞ்ச சன்னியம் என்னும் திருச்சங்கின் அம்ச மாக அறுதியிட்டனர். பொய்கையில் அவதரித்தது காரண மாகப் பொய்கையாழ்வார் என்று திருநாமம் பெற்றார். பூதத்தாழ்வார் திருக்கடல் மல்லையில் (மாமல்லபுரம்) குருக்கத்திப் பந்தரில் ஒரு குருக்கத்திமலரில் ஐப்பசித்திங்கள் அவிட்ட நட்சத்திரத்தில் அவதரித்தார். வடமொழியில் (பூ.சத்தாயாம்) என்ற தாது வடிவாகப் பிறந்தது பூதம் என்ற சொல். இது சத்தைப் பெற்றது என்று பொருள் படும். எம்பெருமானின் திருக்குணங்களை அநுபவித்தே சத்தைப் பெற்றார் என்னும் காரணம் பற்றியே பூதத்தாழ் இவர் என்று திருநாமம் ஆயிற்று. கடல் வண்ணன் பூதங்கள் என்ற விடத்து ‘எம்பெருமானுடைய சிரம ஹரமான வடிவழகை அதுசந்தித்து அதனாலே சத்தை யாம்படி இருக்குமவர்கள். இங்கு பூதம் என்ற சொல் அடியார்களைக் காட்டுகின்றது. (அவன் சத்தையே 9. தேகiஸ்வரஸ்துதி - 7. 10. திருவாய், 5.2:1 (பொலிக பொலிக பொலிக).