பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூவர் ஏற்றிய மொழிவிளக்கு 85 சத்தையாய் அறுகையாலே பூதம் அடியார்களைக் காட்டு கின்றது). இந்த வியாக்கியாயணமும் ஈண்டுச் சிந்தித்தற் குரியது. இவரைத் திருமாலின் கெளமோதகி என்ற கதையின் அம்சமாகக் கருதுவர் வைணவப் பெருமக்கள். பேயாழ்வார் திருவல்லிக்கேணி என்னும் திவ்விய தேசத் திற்குத் தெற்கிலுள்ள மயிலாப்பூரில் ஆதிகேசவப் பெருமாள் கோயில் திருக்கிணற்றில் உண்டானதொரு செவ்வல்லி மலரில் ஐப்பசித்திங்கள் சதய நட்சத்திரத்தில் திருமாலின் நந்தகம் என்ற வாளின் கூறாக அவதரித்தார். இவர் ஒப்புயர்வற்ற பகவத் பக்தியையுடையவராய், பார்ப்ப வர்கள் கண்ணில் இவர் பேய் பிடித்தவர் என்னும்படி நெஞ்சழிந்து கண் சுழன்று அழுதும் சிரித்தும் தொழுதும் எழுந்தாடியும் மகிழ்ந்து பாடியும் அலறியுமே பொழுது போக்கிக் கொண்டிருந்தமையால் பேயாழ்வார் என்ற திருநாமம் பெற்றனர். இந்த மூவரும் பார்ப்பனர் என்ப தற்குத் தக்க சான்றுகள் இல்லை, பஞ்ச சம்ஸ்காரம் பெறுதல்: இந்த மூன்று ஆழ்வார்களும் இராமர், பரதர், இலக்குமணர்போல் அடுத்தடுத்த நாட் களில் அவதரித்தவர்கள்; மானிடயோநியில் (அயோநிஜர் கள்) பிறவாதவர்கள். இம்மூவருக்கும் வைகுந்தநாதனின் திருவாணையினால் சேனை முதலியார் இந்த இருள்தருமா நிலத்திற்கு எழுந்தருளிப் பஞ்ச சம்ஸ்காரங்களைச் செய்து திருமந்திரப் பொருளையும் உபதேசித்ததாக வரலாறு. சத்துவகுணமே நிறையப் பெற்றவர்களாய் எம்பெருமானுக்குக் கைங்கரியம் செய்வதையே பெரும் பேறாகக் கொண்டு ஞானபக்தி விரக்திகளுக்குப் பிறப்பிட மாய் விளங்கியவர்கள் இவர்கள். உண்னும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்' (திருவாய், 6.7:1) என்றாற்போல பகவத் குணாதுபவத் தையே தாரக போஷக போக்கியமாகக் கொண்டு அன்ன பானாதிகளை ஒழித்தவர்கள். உண்டியே உடையே உகந்து ஓடுகின்ற இம்மண்டலத்தாரோடு கூடாமல் (பெரு.