பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

ஆழ்வார்களின் ஆரா அமுது


திரு. 3:4 ஒரு நாள் இருந்தவிடத்தில் மற்றொரு நாள் இராமல் ஒடித் திரியும் யோகியர்களாய் இருந்த இவர்கள் தம்மிலும் ஒருவரையொருவர் அறியாமல் தனித்தனியே சஞ்சாரம் செய்துகொண்டிருந்தவர்கள், இம்மூவரையும் ஓரிடத்தில் சேர்த்து ஆட்கொண்டு இவர்கள் முகமாக உலகத்தை உய்விக்கவேண்டும் என்ற எண்ணம் எம்பெரு மானுடைய திருவுள்ளத்தில் உண்டாயிற்று. இத்திரு வுள்ளக்குறிப்பு நிறைவேறின இடமே திருக்கோவலூரில் மிருகண்டு என்பாரின் திருமாளிகையில் உள்ள இடைகழி என்பதை நாம் அறிதல் வேண்டும். திருக்கோவலூர் நிகழ்ச்சிக்குப் பிறகு இவ்வாழ்வார்கள் மூவரும் திருக்கோவலூர் ஆயனாரைத் தொழுது விடை பெற்று நெடுங்காலம் திருப்பதிகள் தோறும் சென்று மங்களாசாசனம் செய்து யோகபலத்தால் ஆயிரக்கணக் கான ஆண்டுகள் இம்மண்ணுலகில் வாழ்ந்திருந்து வையகத் தினரை வாழ்வித்தனர் என்பது வைணவர்களின் நம்பிக்கை ஆனால் இவருக்குப் பின்னர் தோன்றின ஆழ்வார்களுள் ஒருவராவது இவர்களைச் சந்தித்தாகச் சான்றுகள் இல்லை. அருளிச்செயல்கள்: இந்த மூன்று ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் முதல் மூன்று திருவந்தாதிகளைத் தவிர வேறு இல்லை. ஆகவே, இவ்வந்தாதிகளின் பொதுத் தன்மை களையும் தனித்தன்மைகளையும் பற்றிச் சிந்திப்போம். பொதுத்தன்மைகள்: (1) இந்த ஆழ்வார்களின் பாசு ரங்களில் திருவரங்கம், திருவெஃகா, திருக்கோவலூர், திருவிண்ணகர், திருவேங்கடம், திருக்கோட்டியூர், திருமா விருஞ்சோலைமலை, திருத்தண்கால், தஞ்சைமாமணிக் கோயில், திருக்குடந்தை, திருவத்தியூர், திருப்பாற்கடல், திருவல்லிக்கேணி, திருவேளுக்கை, திருப்பாடகம், திரு வட்டபுயகரம், பரமபதம் (பனிவிசும்பு) ஆகிய திவ்விய தேசங்கள் குறிப்பிடப் பெற்றுள்ளன. ஒவ்வொரு ஆழ்வார் பாசுரங்களிலும் ஒவ்வொன்றைக் காட்டுவேன்.