102
ஆழ்வார்களின் ஆரா அமுது
பூதத்தாழ்வார் காட்டுபவை காட்சி : பூதத்தாழ்வார் காட்டும் காட்சி ஒன்றினைக் காண்போம். திருமலையில் மதப்பெருக்கால் செருக்கித் திரிகின்றது ஒரு களிறு, வழியில் அது தன் சிறந்த பிடியைக் காண்கின்றது. அதனை மீறி அப்பால் செல்லமாட்டாது அதற்கு இனிய உணவு ஈந்து அதன் மனம் நிறைவிக்க விரும்புகின்றது. அதன் முன் நின்று இரண்டே கணுக்களையுடைய மூங்கிற் குருத் தொன்றைப் பிடுங்கி அருகில் ஒரு மலை முழைஞ்சிலிருக்கும் ஒரு தேனடையில் தோய்த்து அப்பிடியின் வாயில் ஊட்டு கின்றது குளோபஜாமுனை ஊட்டுவது போல. இதனை ஆழ்வார். o
பெருகு மதவேழம் மாப்பிடிக்கு முன்கின்று இருகண் இளமூங்கில் வாங்கி- அருகிருந்த தேன் கலந்து நீட்டும் திருவேங்கடங்கண்டிர்
வான்கலந்த வண்ணன் வரை: . .
வேழம்.யானை; பிடி-பெண்யானை; இருகண். இரண்டு கணுக்களையுடைய வண்ணன்-நிறத்தன் : வரை.மலை, ! என்று சொல்லோவியமாக்கிக் காட்டுகின்றார். இத்தகைய ஒரு காட்சியைத் திருமங்கையாழ்வார் இமயமலையில் காட்டுவார். திருப்பிரிதி என்ற திவ்விய தேசத்தை வருணிக்கும் இந்த ஆழ்வார் இக்காட்சியைக் காட்டு கின்றார். , - -- - . -
வரைசெய் மாக்களிறு இளவெதிர் வளர்முளை
அளைமிகு தேன்தோய்த்துப் பிரசவாரிதன் இளம்பிடிக் கருள்செயும் பிரிதிசென் றடைநெஞ்சே' |வரைசெய்.மலை போன்ற களிறு-ஆண் யானை: வெதிர்-மூங்கில்; வளர்முளை-வளரும் இள மூங்கில்:
20. இரண். திருவந். 75. 21. பெரி. திரு. 1.2:5