பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii பெரியாழ்வார் : 17. பூமாலை கட்டி வில்லிப் புதிதுரரான் மகிழச் சூட்டிப் பாமாலை யாத்தும் அந்தப் பரமனை வணங்கி நிற்பார் மாமாலை சூடித் தந்த மங்கையை வளர்த்த தந்தை ஆமாமாம் பெரிய ஆழ்வார் அவர்பெரும் புலவர் ஆவாா: 18. பல்லாண்டு பாடிப் பாடிப் பாதாதி கேசம் பாடிச் சொல்லாண்டு கண்ணன் பேரில் சுவைகூட்டும் தமிழைப் பாடி வல்லானைப் பிள்ளை யாக்கி வளர்க்கின்ற தாயும் தானாய்ச் சொல்லார அன்பு தேக்கிச் சுடர்க்கவி பாடி னாரே! ஆண்டாள் : 19. தனக்கொரு கணவன் வேண்டித் தானேதேர்ந்தெடுத்துக் கொண்டான் வணக்குயில் ஆண்டாள் என்னும் வஞ்சியாள் அரங்கத் தானை மனத்திலே இன்பம் பொங்க மணக்கோலம் கொண்டு சென்றே நினைத்ததை நடத்திக் கொண்டாள் நின்மல னொடுக வந்தாள்! 20. கண்ணனை மாயன் தன்னைக் காதலால் ஏங்கி ஏங்கி எண்ணத்துள் வைத்துக் கொண்டாள் எப்போதும் அவன் நினைப்பில்