பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவர் ஏற்றிய மொழிவிளக்கு 107 காட்சி - 2: இன்னொரு யானையின் செயலையும் அதன் முடிவையும் காண்போம். மதயானை போலெழுந்த மாமுகில் காள்!" என்று ஆண்டாள் வருணித்ததை நாம் அறிவோம். திருமங்கை மன்னனோ, கரிய மாமுகில் படலங்கள் கிடந்து அவை முழங்கிடக் களிறு என்று' என்று திருப்பிரிதித் திருமொழியில் மேகத்தை யானையோடு ஒப்பிட்டுப் பேசுவர். திருமலையில் ஆண் யாணையொன்று கரிய மலை முகட்டில் படிந்திருந்த முகிற் படலத்தை எதிரியான ஒரு யானையென்று மயங்கிப் பெரிய வேகத் துடன் சென்று துதிக்கையால் குத்துகின்றது. இதனைக் கண்ட யாளி ஒன்று இக்களிற்றுக்கு இவ்வளவு மதமா? என்று சினந்து ஓடிவந்து அந்த யானையின்மீது பாய்ந்து ஓங்கி அறைந்து அதன் கொம்புகளை முறிக்கின்றது. யானையும் வாய் விட்டுப் பிளிறிக் கொண்டு மடிந்தொழி கின்றது. ஆயினும், அது சினந்தணியாமல் அங்கேயே நின்ற வண்ணம் பெரு முழக்கம் செய்து மலையையே அதிர் வைக்கின்றது. இப்படியொரு காட்சி. களிறு முகில்குத்தக் கையெடுத் தோடி ஒளிறு மருப்பொசிகை யாளி-பிளிறி விழகொன்று நின்றதிரும் வேங்கடமே! மேனாள் குழக்கன்று கொண்டெறிந்தான் குன்று: களிறு-ஆண் யானை: முகில் - மேகம், கை - துதிக்கை: ஒளிறு - விளங்குகின்ற; ஒசி முறிக்கின்ற; குழ கன்று . இளங் கன்று (வத்சலாசுரன்) என்பது ஆழ்வார் காட்டும் சொல்லோவியம். 29, நாக் திரு. 8:9 ۔----- 30. பெரி. திரு. 1.2:10 31. மூன். திருவந். 71.