பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூவர் ஏற்றிய மொழிவிளக்கு 109 காட்சி - 5: இந்த ஆழ்வாரும் ஒரு குரங்கின் செயல் களைக் காட்டி மகிழ்கின்றார். தெளிவான கற்பாறையின் மீது உட்கார்ந்து கொண்டுள்ளது பெண் குரங்கொன்று. அது தனக்கு நட்பாகவுள்ள ஆண் குரங்கொன்றை நோக்கி விண்ணில் வெண்மையாகத் தோன்றும் திங்களைப் பிடித்துத் தருமாறு வேண்டுகின்றது. தெளிந்த சிலாதலத்தின் மேலிருந்த மந்தி அளிந்த கடுவனையே நோக்கி-விளங்கிய வெண்மதியம் தாவென்னும் வேங்கடமே (சிலா தலம் - கற்பாறை: மந்தி . பெண் குரங்கு: கடுவன் . ஆண் குரங்கு; மதியம் - திங்கள்; என்பது பேயாழ்வாரின் சொல்லோவியம். இப்பாடலால் திருமலையின் உயர்ச்சியை அறிகின்றோம். மூன்று ஆழ்வார்களின் பக்தி நிலைகள் : இனி, இந்த மூன்று ஆழ்வார்களின் பக்தி நிலைகளை எடுத்துக்காட்டு வேன். பக்தி நெறி கர்மயோகம், ஞானயோகம், பக்தி' யோகம் என்ற மூன்று நிலைகளில் பயிற்சியடைய வேண்டிய நெறி. முதல் இரண்டும் மூன்றாவதன் படிகள். இவை வைணவ நூல்களில் கண்டு தெளியப் பெற வேண்டி யவை8. முதிர்ந்த பக்தி நிலையை ஞானம் கனிந்த நலம்’** என்று குறிப்பிடுவர் திருவரங்கத் தமுதனார். இந்த நிலையில் முமுட்சுகள் தம் முனைப்பை அகற்றி இறைவ னுடைய சங்கற்பத்துக்கு அடிபணிந்து இறைவனுடன் நிரந்தரத் தொடர்பு கொள்வதற்குத் தயாராகின்றனர். 34 டிெ. 58 35. முத்தி நெறி . பக். 95 - 100 காண்க. 36. இராமாது. நூற். 66 37. முமுட்சுகள் . மோட்சத்தில் வி ரு ப் ப மு ைட ய ; $fff #$6ff