பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/153

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#16 ஆழ்வார்களின் ஆர்ா அமுது கதல தாரை போன்ற தொடர்பு ஏற்படுகின்றது. நாளாக நாளாக இந்நிலையில் ஒரு புதிய ஆற்றல் தோன்றுகின்றது. வானநூல் அறிஞர்கள் பூமியின் சிறுமையையும் அதை சர்த்து நிற்கும் கதிரவனின் பெருமையையும் உணர்வது போல், பக்தர்களும் சமுசாரத்தில் உழலும் தம் ஆன்மாவின் சிறுமையையும்: எல்லா உயிர்களையும் பு ர க் கு ம் இறைவனின் பெருமையையும் பேராற்றலையும் உணர் கின்றனர். இந்நிலையில் சீவான்மா பரமான்மாவுடன் கலக்கின்றது; அப்பொழுது அது கடலில் கிடக்கும் கடற் பஞ்சு போன்ற நிலையினை அடைகின்றது. இந்நிலையிலும் மூன்று பிரிவுகள் இருப்பதாகக் காட்டுவர் வைணவப் பெருமக்கள். அவை, பரபக்தி, பரஞானம், பரமபக்தி என்பவையாகும். பரபக்தி என்பது, எம்பெருமானை நேரில் காணவேண்டும் என்கின்ற ஆவல்; அவனை நேரில் காணல் "பரஞானம்'; பின்பு மேன்மேலும் இடையறாது அநுபவிக்க வேண்டும் என்னும் ஆவல் 'பரமபக்தி". இவற்றை மற்றொரு விதமாகவும் பண்டைய ஆசிரியர்கள் விளக்குவர். எம்பெருமானோடு கலந்த போது சகிக்கும்படியாகவும், பிரிந்தபோது துக்கிக்கும்படி யாகவும் இருக்கும் நிலை பரபக்தி'; எம்பெருமானுடைய முழு நிறைவு நேர் காட்சி பரஞானம்'; அவனுடைய அதுபவம் பெறாவிடில் நீரைவிட்டுப் பிரிந்த மீன்போல மூச்சு அடங்கும்படி இருத்தல் பரமபக்தி' என்று விளக்கம் தருவர் அவர்கள். இந்த மூன்று நிலைகட்கும் முறையே பொய்கை யாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூன்று ஆழ்வார் பெருமக்கள் எடுத்துக்காட்டுகளாக்த் திகழ் கின்றனர். ஆயினும் இம்மூன்று நிலைகளும் இந்த மூவர்க்கும் தனித்தனியே குறைவின்றி இருக்குமா யினும் ஒவ்வொரு நிலையும் ஒவ்வோரிடையேயும் தலை யெடுத்து மற்றவை அடங்கியிருக்கும். இதனையும் த்ெளி