பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/156

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூவர் ஏற்றிய மொழிவிளக்கு 鲨量3》 அறிகின்ற அறிவு ஒன்றுதான் ஞானம் எனப்படும் என்பதே யாகும். “...ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு. 40 (உணர்வு-ஞானம்; நோக்கும்-சென்று பற்றும்.) என்பது ஆழ்வார் திருவாக்கு. உண்மையில் இறைவனையாவது, அவன் சாயல் அல்லது உருவத்தையாவது அறிந்து கொள்வது அருமை. இவற்றை அறிய முயலும்போது அறிவு அறியாமையாகி விடுகின்றது! 'அறிதோறும் அறியாமை கண்டற்றால்: என்று இன்பத்திற்குக் கூறும் கூற்று இறைவனை அறிவதற்கும் பொருந்தும். உணர்வார்.ஆர்.உன்பெருமை ஊழிதோறு ஊழி: உணர்வார்.ஆர் உன்உருவம் தன்னை? - உணர்வார்.ஆர்? விண்ணகத்தாய் மண்ண்கத்தாய்! வேங்கடத்தாய்! நால்வேதப் பண்ணகத்தாய் கிேடந்த .. 8 4?(:frsلt |ஊழிதோறு ஊழி.காலம் உள்ள அளவும்; பால்.திரும் பாற்கடல்). - என்று பாடுகின்றார் ஆழ்வார் இறைவனை நோக்கி. *யுகக்கணக்காக ஆராய்ச்சி செய்து கொண்டே போனாலும் 40. முதல் திருவந்: எ. 41. குறள்.11.10. 42. முதல். திருவந். 68, 3