பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

ஆழ்வார்களின் ஆரா அமுது

இறைவனுடைய பெருமையையும் அறிய முடியாது; எளிமையையும் உள்ளபடி அறிய முடியாது. உணர்வார் ஆர்?" என்ற வினாவினால் எல்லாம் அறியவல்ல இறைவனாலும் தன்னை அறிய முடியாது என்று சூசகமாகத் தெரிவிக்கப்படுகின்றது. * அவன் அருளால் அவன் தாள் வணங்கிய (திருவா. சிவபுராணம்-18). வேத இருடிகள்தாம் முதன் முதல் இந்த உலகில், மனித நாகரிக அருளோடிய காலத்தில் இப்படிப்பட்ட உண்மையை வெளியிட முயன்றார்கள். வேத வடிவிலும் கவிதை வடிவிலும், இதைத்தான் வேதாந்திகள் தத்துவரூபமாக வெளியிட முயன்றார்கள். புராண ஆசிரியர்கள் பல்வேறு கதைகளாக வெளியிட முயன்றார்கள்.

இவ்விடத்தில் வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியாரின் பாடல் ஒன்று சிந்தித்தல் தகும். ஏத்திமத மெல்லாம் எதையறிந்தேம் என்னும்? எதைச் சாத்திரம்கன் காய்ந்து, சலிக்கும்? எதை - காத்திகமோர் சற்றுமே ஒர்க்திலதனச் சாதித் திடும்?அதையே பற்றுவாய் கெஞ்சே பரிந்து.* இதன்கண் நாத்திகம் தான் துணிந்து கொண்ட நேர் காட்சி அளவையால் ஆராய்ந்து காணாமையான், ஒரு சிறிதும் இல்லாததாகவே சாதித்திடும் என்றதனால் பரம்பொருள் புலன்கட்கு எட்டாதவன் என்பது உணர்த்து கின்றார். அளவை நூல் முதலிய சாத்திரங்கள் அநுமான அளவ்ையாலும், கண்டவர் சொல்லாலும், பரம்பொருள் உண்டென்று கண்டும், அநுபவத்திற்கு விஷயமாதல் இல்லாமையால் காணாதும் சஞ்சலிக்கும். என்கின்றார். 43. அகலிகை வெண்பா கட்வுள் வாழ்த்து