பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/159

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


116 ஆழ்வார்களின் ஆரா அமுது போன்ற புராணக் கை தகளையும் வைணவர்கட்குத் திருமாலின் உறைவிடமான பாலும் நீரும் அவனுடைய தெளிந்த- குளிர்ந்த - அருளுக்கு அறிகுறியாகும். சில அழகான புராணக்கதைகள் இறைவனுடைய அருளுக்கும் பெருமைக்கும் சான்றுகளாக அமைந்துள்ளன. இவற்றுள் கடல் கடைந்த கதை ஒன்றி. ...........................வரைகட்டு மீள்அரவைச் சுற்றிக் கடைந்தான் பெயரன்றே, தொல்கரகைப் பற்றிக் கடத்தும் படை: இவரை..மந்தரம்லை: நீள் அரவு.வாசுகி, தொல்-பழமை யான; பற்றி.அள்ளி எடுத்துக்கொண்டுபோய்: நரகு-சம்சாரம்; படை.சாதனம்.1 என்பது பொய்கையாழ்வாரின் கொள்கை, எம் பெருமானுடைய பெயர் அவனுடைய குணங்களுக்கும் ஆற்றல்கட்கும் வாசகம். இந்தப் பெயரைச் சொல்லவே, பக்தர்கட்குத் துன்பங்கள், தொல்லைகள், கவலைகள் எல்லாம் போய்விடுமாம், குழந்தைக்குத் தாய் பேர் சொல்லக் கிலேசம் போமாப்போலே. ஏதோ ஒன்றால் சங்கடப்படும் குழந்தை அம்மா! என்று கூப்பிட்டு ஓடி வந்து அதனைத் தீர்த்துக் கொள்வதை நாம் கண்டிருக் கின்றோம் அல்லவா? வாய் அவனை அல்லது வாழ்த்தாது” பேரே வரப் பிதற்றல் அல்லால், என்பெருமானை ஆரே அறிவார்?" 44. முதல். திருவந். 81. 43. டிெ-11. 48. டிெ-56.