பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவர் ஏற்றிய மொழிவிளக்கு 117

நமோ நாரணா என்னும் சொல்மாலை கற்றேன். 41

என்பனவற்றைக் காண்க. கடல் கடைந்த கதையைப்போல் உலகளந்த கதையும் இறைவனுடைய பெருமையை வெளிப் படுத்துகின்றது. அடியும் படி கடப்ப தோள்திசைமேல் செல்ல முடியும் விசும்பளங்த தென்பர். 8 படி-பூமி, முடிகிரீடம்; விசும்பு-ஆகாயம்.i என்ற ஆழ்வாரின் வாக்கு எவ்வளவு அழகாக வருகின்றது: இத்தகைய திருமுடியை நீள்முடி என்றும், திருவடியை நீள்கழல் என்றும் இவரே குறிப்பிடுகின்றார். கழல் ஒன்று எடுத்து.ஒருகை சுற்றிஓர் கைமேல் சுழலும் சுராசுரர்கள் அஞ்ச- அழலும் செருவாழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல மருவாழி நெஞ்சே மகிழ். * நிகழல்.திருவடி : ஆழி.சக்கரம்). இதிலும் உலகளந்த பெருமானுடைய திருவடியைப் பணித்து மகிழ்ந்திருக்குமாறு திருவுள்ளத்தைத் தேற்றுவதைக் காணலாம். எவ்லா ஆழ்வார்களைப் போலவே இந்த ஆழ்வாரும் எம்பெருமான் திருவடிகளில்தான் அதிகமாக ஆழங்கால் படுகின்றார். இவ்விடத்தில், 47. முதல். திருவந்.17. 48. டிெ.57. 49. டிெ.48,