பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# } ஒ மூவர் ஏற்றிய மொழிவிளக்கு திருமாலே! கின் அடியை வந்திப்பார் காண்பர் வழி. என்பதில் நின் அடியை ஆச்ரயிப்பவர்கள் அர்ச்சிராதி கதியைக் கண்டு அநுபவிப்பர்' என்று கூறுவதைக் இாணலாம். எம்பெருமானின் வீர சரித்திரத்தைக் காட்டிலும் அவனது செளலப்பிய சரித்திரமே இந்த ஆழ்வாரின் உள்ளத்தை வசீகரிக்கின்றது. மறைகளும் தொடர்ந்து வர முடியாமல் ஓங்கும்படி மறைந்து போனவன் ஆநிரை களுக்குப் பின்னே காண்ப்பட்டான் என்றால் அந்த மேன்மையையும் நீர்மையையும் அடியவர்களால் மறக்க முடியுமா? வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய்த் தேனாகிப் பாலாம் திருமாலே - ஆனாய்ச்சி வெண்ணெய் விழுங்க கிறையுமே, முன்னொருநாள் மண்ணை உமிழ்ந்த வயிறு.”* (வான். ஆகாயம்; மறிகடல்-அலை மறிந்து விழுகிற கிடல்; மாருதம்.காற்று; ஆய்ச்சி.இடைச்சி; நிறையுமே.நிறையுமோ! என்ற இப்பாசுரத்தில் ஆழ்வார் கிருட்டிணன் உறி வெண்ணெய் விழுங்கிய குழந்தைத் திருவிளையாடலில் தம் உள்ளத்தைப் பறிகொடுக்கின்றார். இந்த வயிறு பிரளய காலத்தில் உலகத்தை வைத்துக் காப்பாற்றிய பிறகு வெளிநாடு காண உமிழ்ந்து விட்ட வயிறுதான். அந்தப் பெருமையை ஒளித்து வெண்ணெயோடு வெண்ணெய் போல் உருகும் உள்ளங்களையும் களவு கொண்ட சீலம் பொய்கையாழ்வாரின் சிறந்த உகப்பிற்குப் பொருளாவதில் என்ன வியப்பு: வெண்ணெய் முதலியவற்றைக் களவு செய்து உண்டதெல்லாம் பசி நீங்கி வயிறு நிறைவதற்காக 53. முதல்: திருவந். 92