பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/163

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

ஆழ்வார்களின் ஆரா அமுது


அன்று; அடியார்களின் கைதிண்டப் பெற்ற பொருளை உட்கொண்டாலன்றித் தரிக்க முடியாமையினால் செய்த காரியம் இது. தேனாகிப் பாலாந்திருமாலே-என்றது. :பரம்போக்கியனான உன்னை ஞானிகள் உட்கொள்ளக் கருதா நிற்க நீ வேறொரு பொருளை போக்கியமாக நினைத்து உட்கொள்வது என்னே?' என்பது குறிப்பு. இப்படிப்பட்ட எம்பெருமானை இந்த ஆழ்வாரின் உணர்வு நோக்கிக் கொண்டே இருக்கின்றது, திசையறி கருவி வடக்கு நோக்குவது போல. பெயரும் கருங்கடலே கோக்கும்.ஆ(று); ஒண்பூ உயரும் கதிரவனையே நோக்கும்; உயிரும் தருமனையே கோக்கும்; ஒண்தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு." 1பெயரும். பொங்கிக் கிளருகின்ற; ஒண் பூ - தாமரைப் பூ; நோக்கும் . கண்டு மலரும்; தருமன் - எமன்: உணர்வு - ஞானம்; நோக்கும் . சென்றுபற்றும்; என்பது ஆழ்வாரின் வாக்கு. இதில் ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு" என்ற அடியே முக்கியமானது. ஆறுகளானவை கடலையே நோக்கிச் செல் வதும், தாமரை மலர் கதிரவனையே நோக்கிமலர்வதும், உயிர்கள் எமதர்மனையே சென்று கிட்டுவதும் முறையாக நிகழ்வதைப் போலவே, ஞானம் என்பதும் திருமாலைப் பற்றியல்லது பிறவற்றைப்பற்றி நில்லாது. எம்பெருமானை பன்றி இதர பொருள்களைப்பற்றி உண்டாகும் அறிவு அறிவல்ல என்பது ஆழ்வாரின் கருத்து. ஆகவே, மனத்தி னால் தேடும்போது நின் திருவடிகளையே தேடுவேன்; வாயினால் நின் புகழ்களையே பாடுவேன்; உன்னுடைய அழகிய திருவடிகளையே சூடுவேன்' என்று கூறுவார். 54. முதல். திருவந். 67 55. டிெ . 88.