பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவர் ஏற்றிய மொழிவிளக்கு 125. யுடையது. அவன் அளக்கிற இடத்திலே பூமி சென்றதோ? பூமி கிடந்தவிடமெல்லாம் தானே சென்று அளந்தானித் தனையன்றோ என்பது பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியான சூக்தி. -அதாவது 'உலகமுள்ள விடமெல் லாம் தானே சென்று அடிப்படுத்திக் கொண்டது போல, அவன் தானே மேல் விழுந்து விஷயீகரிக்கப் பெற்றேன் அடியேன்"- என்பது இதன் பொருளாகும். இவ்விடத்தில், 'குருக்கத்தி மலரில் திருவவதரித்த வருக்கு கருப்பவாசம் எப்படி வந்தது?" என்ற வினா எழுகின்றது. தீண்டா வழும்பும் செந்நீரும் சீயும் நரம்பும் செறிதசையும் வேண்டா நாற்றம் மிக்கிருக்கின்ற" (திரு. கலம்பகம்.17) கருவறையில் நின்றும் ஆழ்வார் பிறந்தார் என்று கொள்ள வேண்டிய அவசியம் யாதும் இல்லை; அவர் எவ்விடத்தில் அவதரித்தாரோ அவ்விடமே கருப்ப இடமாகும். நான் இவ்விருள்தருமா ஞாலத்தில் வந்து தோன்றுவதற்கு முன்பே எம்பெருமானின் கடைக்கண் பார்வை பெற்றவன்" என்பதுவே சொல்ல வேண்டுமென்ற விருப்பம். அன்று நான் பிறந்திலேன்; பிறந்தபின் மறந்: திலேன் (திருச்சந்த-64) என்றாற்போலக் கொள்ளலுமாம். பொய்கையாழ்வாரின் பாசுரங்கள் பூதத்தாழ்வாரின் பாசுரங்களுக்கு முன் மாதிரியாக அமைந்தன என்று ஊகம் செய்யலாம். மாமல்லபுரச் சிற்பங்களுக்குக் காஞ்சி கைலாசநாதர் கோயில் முன்மாதிரியென்று கலைச் சுவைஞர்கள் ஊகிக்கின்றார்களல்லவா? அதுபோல என்க. பொய்கையாழ்வாரைப் போலவே பூதத்தாழ்வாரும் *அகலகில்லேன் இறையும்' என்று பெரியபிராட்டியார் நித்திய வாசம் செய்யும் நாராயண மூர்த்தியைக் கடவுளாக, வழிபடுகின்றார். திருமங்கை கின்றருளும் தெய்வம்கா வாழ்த்தும் கருமம் கடைப்பிடிமின் கண்டிர்-உரிமையால்