பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

ஆழ்வார்களின் ஆரா அமுது


ஏத்தினோம் பாதம், இருந்தடக்கை எங்தையேர் காத்திசையும் கேட்டிரே காம்.”* திருமங்கை.பெரியபிராட்டியார்; நின்றருளும்.நித்திய வாசம் செய்யும்; இருதடக்கை.நீண்ட கைகள்; பாதம்-திருவடிகள்) :பிராட்டி சம்பந்தத்தால் மேன்மை பெற்றவன் சீமந் நாராயணன். அவனை நாவினால் வாழ்த்துவதை உறுதி யாகக் கடைப்பிடியுங்கள் என்று முன்னிரண்டு அடிகளில் கூறியவர். தானும் அவனுடைய திருநாமங்களையும் திருவடிகளையும் போற்றுவதாகத் தெரிவிக்கின்றார் பின் இரண்டு அடிகளில். இதையே உறுதிப்படுத்துவதுபோல், ககர்இழைத்து கித்திலத்து நாள்மலர்கொண்டு, ஆங்கே திகழும் மணிவயிரம் சேர்த்து-கிகர் இல்லாப் பைங்கமலம் ஏந்திப் பணிந்தேன் பனிமலராள் அங்கம்வலம் கொண்டான் அடி.' நகர் இழைத்து.என் நெஞ்சை அவனுக்கு உறைவிட மாக்கி; நித்திலம்-முத்து; மணிவயிரம்.நல்ல மாணிக்கம்; நிகர் இல்லா.ஒப்பில்லாத, கமலம். தாமரை, பனிமலராள்.பெரியபிராட்டி.1 என்று பேசுகின்றார். இதில் திருமகள் கொழுநனான எம்பெருமானை என்னுடைய நெஞ்சிலே எழுந்தருளப் பண்ணி உயர்ந்த பக்திப் பெருங்காதலைக் காட்டினேன்" என்று சொல்ல நினைத்த கருத்தை ஒரு சமத்காரமாகச் சொல்லுகின்றார். இதனை விளக்குவேன். 64. இரண். திருவந், 57 65. டிெ 4.