பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/170

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூவர் ஏற்றிய மொழிவிளக்கு 127

  • நகரிழைத்து - அரசர்கள் வசிக்கும் இடம் நகரம் எனப்படும். தேவாதி தேவனான எம்பெருமான் வசிக்கும் இடம் பக்தர்களின் இருதயம். இவ்வாழ்வார் பக்தசிரோ மணி. ஆதலால் இறைவன் இவர் திருவுள்ளத்தில் உவந்து வசிப்பவன் என்பது திண்ணம். ஆகவே நகரிழைத்து" என்றது என்னுடைய நெஞ்சை அவனுக்கு உறைவிட மாக்கி’ என்று பொருள்படுகின்றது.

அரசர்களை மகிழ்ச்சியுறும்படி செய்ய விரும்புபவர்கள் தாமரை முதலிய நல்ல மலர்களைக் கொண்டு பணிவார் கள். அதுபோலவே தாமும் எம்பெருமானை நல்லதொரு மலரிட்டுப் பணிந்தமையைச் சொல்லுகின்றார்தொடர்ந்து - கிேகரில்லாப் பைங்கமலம் ஏந்திப் பணிந்தேன்’ என்பதாக, சாத்திரங்களில் அகிம்சை, புலனடக்கம், எல்லோரிடமும் கருணை, பொறுமை, ஞானம், தவம், தியானம், சத்தியம் என்ற எட்டும் எம்பெருமானுக்கு உகப்பான மலர்களாகச் சொல்லப் பெற்றுள்ளன. இதையொட்டி இந்த ஆழ்வார் பகவத் பக்தியை நிகரில்லா தாமரை மலராகக் கருது கின்றார். தாமரைப் பூ என்றால் அதற்குப் புறவிதழ், அக விதழ் முதலானவை இருக்குமல்லவா? அவற்றின் இடங் களில் சிநேகம், சங்கம், காமம் என்கின்ற பருவச் சிறப்பு களை இட்டுப் பேச நினைக்கின்றார். அவற்றையும் நேரே சொல்லாமல் முத்து, மணி, வயிரம் என்று உருவகப் படுத்திப் பேசுகின்றார். நிகரில்லாப் பைங்கமலம்' என்றது பொற்கமலத்தைக் குறிக்கின்றபடியால் அதற்கிணங்க முத்தையும் மணியையும் வயிரத்தையும் சொல்லும்படி நேர்கின்றது. முதல் அடியில் மலர் என்றது மலரிதழைச் சொன்னபடியாகும்; இஃது ஆகுபெயர். புறவிதழின் இடத்தில் முத்தாகச் சொல்லப் பெற்ற சிநேகமும், அகவிதழ் இடத்திலே மாணிக்கமாகச் சொல்லப் பெற்ற சங்கழும், தாதின் இடத்தில் வயிரமாக்ச் சொல்லப் பெற்ற காமமும் க்ம்ல்ம் எனப்பட்ட பக்தியின் பருவநிலை வேற்றும்ை களாகும். இந்த நுட்பங்களை அறிந்து பாசுரத்தை