பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/171

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


128 ஆழ்வார்களின் ஆராஅமுது: அநுபவிக்கும் பக்தியின் நுட்பத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். காப்பதற்குக் கொடி கட்டி"யிருக்கும் இந்த நாராயண மூர்த்தி எங்கும் வியாபித்திருக்கின்றான் என்றும், இவன் இல்லாத இடம் இல்லை என்றும் துணிகின்றார். பொய்கையாருக்கும் இவருக்கும் இந்த மூர்த்தியின் அவதாரங்களில் சிறந்த பக்தியும் எல்லையற்ற நம்பிக்கை. யும் உண்டு. இறைவனுக்கு மக்கள்மீதுள்ள அன்பையும் கருணையையும் அவதார புருஷர்களே நன்கு வெளியிடு கின்றார்கள் என்பது இந்த இரு பெரியார்களின் கருத்து. ஏதிரம்பு கோத்து நின்ற அசுரர்களுக்கும் விரோதியாகிய சரீரத்தைப் போக்கி முடிவில் அருள் செய்தவர்கள் அல்லவா? இத்தகைய இறைவனுடைய பெருமையை யாவது சிறிது அறிந்து கொள்ளலாம்; அவனுடைய எளிமையை ஒருவரும் உள்ள முடியாது!’ என்ற கொள்கை. யைக் குறிப்பாக பொய்கையாழ்வார் வெளியிடுகின்றார். பூதத்தாழ்வாரோ, நீரோத மேனி நெடுமாலே! நின்னடியை யாரோத வல்லார் அறிந்து என்று தெளிவாகச் சொல்லுகின்றார். இந்த எளிமையே இறைவனை விக்கிரகங்களிலும் திருக்கோவில்களிலும் அடியார்களின் திருமாளிகைகளிலும் வந்து நிற்கக் செய்கின்றது என்பது இந்த ஆழ்வார்களின் திருவுள்ளம். புராணக் கதைகள் புதைபொருளோடு கூடியவை. இந்தக் கதைகளை நயமாக எடுத்தாளுவதில் பூதத் தாழ்வார் பொய்கை யாழ்வாரைப் பின்பற்றுகின்றார். எடுத்துக்காட்டு ஒன்று காணவேண்டுமானால், இருவரும் பூதனை வதத்தைக் குறிப்பிடுகின்றனர். பெற்றதாய் போல் வந்து பால் கொடுப்பது போல் நஞ்சை ஊட்டிக் 66. இரண். திருவந். 5