பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/172

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூவர் ஏற்றிய மொழிவிளக்கு #29 கிருட்டிணனைக் கொல்லவந்த அந்தப் பேய் வதம் செய்யப் பட்ட கதை, வேடம் பலிக்காது" என்ற உண்மையை மிக நன்றாக விளக்குகின்றது! இனி, பூதனையைப் பற்றி பூதத்தார் கூறுவதை விளக்கிக் காட்டுவேன். உகந்துன்னை வாங்கி ஒளிநிறங்கொள் கொங்கை அகங்குளிர உண் என்றாள் ஆவி உகந்து முலையுண்பாய் போலே முனிந்துண்டாய் நீயும் அலைபண்பால் ஆனமையால் அன்று ?? |உகந்து.விரும்பி, வாங்கி-தூக்கி எடுத்து: அன்று. (முலை) தந்த அக்காலத்தில்; பண்பு-(இங்கு) எளிமை: உகந்து.மகிழ்ந்து; ஆவி.உயிர்). என்பது ஆழ்வார் பாசுரம். பூதனை யசோதரையான பாவனையுடன் வந்தவளாகையால் அவள் பரிவை ஏறிட்டுக் கொண்டதுபற்றி உகந்து உன்னை வாங்கி" என்கின்றார். ஒரு முலையை வாய்மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு, இருமுலையும் முறை முறையா ஏங்கி ஏங்கி இருந்துணாயே (பெரியாழ். திரு. 2.2:8) என்னும்படியாக பால் விம்மியிருந்ததனால் ஒளிநிறங் கொங்கை' என் கின்றார். நந்தன் பெறப்பெற்ற நம்பி! நான் உகந்து உண்ணும் அமுதே! எந்தை பெருமானே! உண்ணாய் என்னம்மம் சேமமுண்ணாயே" உருகி என் கொங்கையின் தீம்பால் ஒட்டந்து பாய்ந்திடுகின்ற, மருவிக் குடங்கா விருந்து வாய் முலை யுண்ண நீவாராய்' என்று யசோதை ஆவலோடு சொல்லுமாப்போலே பூதனையும் சொல்லு கின்றாள். இக்குறிப்பு தோன்ற, அகங்குளிர உண் என்றான் என்கின்றார். ஆதனை தஈசன பாவனையில் 67. இரண், திருவந். 8 9