பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/175

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#32 ஆழ்வார்க்ளின் ஆரா அமுது: அரியது எளிதாகும் ஆற்றலால் மாற்றிப் பெருக முயல்வாரைப் பெற்றால்-கரியதோர் லெண்கோட்டு மால்யானை வென்று முடித்தன்றே தண்கோட்டு மாமலரால் தாழ்ந்து' |ஆற்றல்-தன்சக்தி; மாற்றி.விலக்கி; பெருக.மிகவும்: உற்சாகமாக, கோடு.கொம்பு; கோடு.பொய்கைக் கரை, மா.சிறந்த; தாழ்ந்து.வணங்கி; என்று பேசுகின்றார். பகவான்ை வழிபட வேண்டுமென்று கைபிடித்த பூவோடு முதலையிடம் அகப்பட்டுக் கொண்டது. யானை. அதன் துயரத்தைப் போக்கவே அேரிை குலையத் தலைகுலைய வந்து தோன்றிய எம்பெருமான், விரோதியைப் போக்கி அந்தத் தாமரையைத் தன் திருவடியில் இட்டுக் கொள்கின்றான். இந்த யானையின் நிலையிலிருப்பது சீவான்ம்ா. இடையூறுகளைப் போக்கி: நாம் செய்யத் தொடங்கும் கைங்கரியத்தை நிறைவு செய்து அதைத் தன் அடிகளில் இட்டுக்கொள்ளச் சித்தமா யிருப்பது பரமான்மா. நம்பக்கல் இடர் வந்ததாகில் முதலைபட்டது படும் என்பது அடியார்களின் நம்பிக்கை. சேதநன் தன்னுடைய முயற்சியை நீக்கிக் கொண்டு. எம்பெருமானுடைய சக்தியே ஓங்கும்படி தின்றால் அரிய காரியமும் எளிதாக முடியும் என்பது இக்கதையின் தேர்ந்த கருத்தாகும் என்பதை நாம் அறியவேண்டும். எம்பெருமானுடைய முழுநிறைவு கொண்ட நேர் காட்சியே பரஞானம் என்று கூறினேன். இதனை இறை. யருளால் இளமையிலிருந்தே பெற்றார் ஆழ்வார். பல பாடல்களில் இக்குறிப்பைக் கண்டு மகிழலாம். கினைப்பன் திருமாலை நீண்டதோள் காண நினைப்பார் பிறப்புஒன்றும் கேரார்-மனைப்பால் பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்பம் எல்லாம் துறந்தார் தொழுதார் அத்தோள்.' 71. இரண். திருவந், 22 72. டிெ 42