பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:மூவுர் ஏற்றிய மொழிவிளக்கு 133 (நீண்டதோள்.சிறந்ததோள்; பிறப்பு.யோனிப் பிறப்பு: மனைப்பால்-சம்சாரத்தில் பிறந்தவர்கள்; துறந் தார்.வெறுப்பார்; சம்சார போகங்களைத் துறந்து அவனை அநுசந்திக்கு மவர்களே பிறவிகளை அடியறுக்கவல்லார் என்கின்றார். இப்படி வோறோர் ஆசையுமின்றி எம்பெருமானுடைய திருமேனியை - திவ்வியவயவத்தை - உண்மையான அநுபவமாக நினைப்பவர்கள் பொய்ந் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும், இந்நின்ற நீர்மை இனியா முறாமை (திருவிருத். 1) என்று சடகோபர் வேண்டிய பிறப்பின்மையைப் பெற்று நித்திய முத்தராய் வாழ்வர் என்பது இந்த ஆழ்வாரின் திருவுள்ளம். இவர் கண்ட நேர்காட்சியைப் பிறிதொரு பாசுரத் திலும் கண்டு மகிழலாம், பணிக்தேன் திருமேனி, பைங்கமலம் கையால் அணிந்தேன்.உன் சேவடிமேல், அன்பாய் - துணிந்தேன் புரிந்தேத்தி உன்னை புகலிடம் பார்த் (து). ஆங்கே இருந்து ஏத்தி வாழும் இது.”* :பணிந்தேன். சேவித்தேன்; பைங்கமலம் . அழகிய தாமரை; சேவடி.செவ்விய அடி; அணிந்தேன். சமர்ப்பித்தேன்; புரிந்து-விரும்பி; புகலிடம். பரமபதம்.) என்பது பாசுரம். உன்னுடைய திவ்விய மங்கள விக்கிரகத் தைச் சேவித்து அதிலே ஆழங்கால்பட்டு வேரற்ற மரம் போல் விழுந்தேன்; மிக்க அன்புடன் உன் திருவடிகளின் மேல் அழகிய தாமரை முதலிய நன்மலர்களைக் கை படைத்த பயனாகச் சமர்ப்பித்தேன்' என்கின்றார். இதில் ஆழ்வார் இறைவனின் நேர்காட்சி கண்டதையும் புத்தி செலுத்தியதையும் காண முடிகின்றது. 73. இரண். திருவந். 65