பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

ஆழ்வார்களின் ஆரா அமுது


இன்னொரு பாசுரத்தையும் காண்போம். பகல்கண்டேன்; காரணனைக் கண்டேன்; கனவில் மிகக்கண்டேன் மீண்டு அவனை மெய்யே-மிகக்கண்டேன்; ஊன்திகழும் நேமி ஒளிதிகழும் சேவடியான் வான்திகழும் சோதி வடிவு.”* (பகல் - நல் விடிவு; மீண்டு - இன்னமும்; மிக மெய்யே - மிகவும் நேரில்; ஊன் - மாமிசம்; நேமி - சக்கரம்; வான் - பரமபதம்.) என்பது பாசுரம். எம்பெருமானுடைய நேர் காட்சி தமக்கு வாய்த்தபடி இதில் வாயாரப் பேசி மகிழ்கின்றார். இந்த இருள் தருமா உலகில் முப்பது நாழிகைக்கு ஒரு முறை இரவும் பகலும் மாறிமாறி வந்தாலும் எம்பெருமானுடைய சேவை கிடைக்கப்பெறாத காலத்தைக் காளராத்திரி யாகவே கருதுவர் ஞானியர்கள். பகலவன் விளங்கும் காலம் பகற்பொழுது என்றும், அவன் மறைந்திருக்கும் காலம் இராப்பொழுது என்றும் நம்போலியர் நினைத் திருந்தாலும் சிறந்த ஞானியர் அங்ஙனம் நினையார்; பகவத் சேவை வாய்க்கும் காலம் எதுவோ அதுவே அவர்கட்குப் பகல்; மற்றது இரவு; இதுவே ஞானியரின் சித்தாந்தம். இதனை அடியொற்றி ஆழ்வார் பகல் கண்டேன்’ என்கின்றார். எம்பெருமானைச் சேவிக்கப் பெற்றேன் என்பது இதன் கருத்து. இக்கருத்தைப் பிறர் தெரிந்து கொள்ளுதல் அரிதாகையினாலே இதனை "நாரணனைக் கண்டேன்’ என்று மேலும் விவரிக்கின்றார். :பகற்கண்டேன்: காளராத்திரியாய்ச் செல்லாதே விடியக் கண்டேன். வடுகர் வார்த்தை போலே தெரிகிறதில்லை; எங்களுக்குத் தெரியும்படிச் சொல்வீரென்ன: நாரணனைக் 74. இரண். திருவந். 81