பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/180

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மூவர் ஏற்றிய மொழிவிளக்கு #37 (தாம் - சேதநர்கள்; ஏத்தும் பொழுது புகழ்வதற் கேற்ற காலம்; திருமருவு தாள் - அழகிய திருவடிகள்; செவ்வே . நேராக) என்பது பாசுரம். எம்பெருமானை வணங்குவதற்கு புலன்களோடு கூடிய அவயவங்கள் உள்ளன; நெஞ்சும் உள்ளேயே உள்ளது; தடாகங்கள்தோறும் தாமரை மலர்களும் உள்ளன. பொழுதும் ஏராளமாக உள்ளது: தலைபடைத்த பயன் அவனை வணங்கலாமே. இப்படி எல்லாம் குறைவின்றி இருக்கவும் மக்கள் ஏன் சம்சாரத்தில் உழல்கின்றனர்?' என்கின்றார். இந்தப் பாசுரம், நாவாயில் உண்டே, ருமோநாரணா என்று ஒவாது உரைக்கும் உரைஉண்டே - மூவாத மாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே என்ஒருவர் தீக்கதிக்கண் செல்லும் திறம்.' (ஒவாது -விட்டு விட்டுச் சொல்லாமல்; நமோ நாரண - எட்டு எழுத்து மந்திரம்; மூவாத . கிழத்தன்மை யற்ற, மாகதி . மோட்சம்; திகதி . கேடுபயக்கும் வழி) என்ற பொய்கை யாழ்வாகின் பாசுரத்தின் கருத்தைப் பெரும்பாலும் தழுவியுள்ளதைக் கண்டு மகிழலாம். தவிரவும் இப்பாசுரம், இனியார் புகுவார் எழுகரக வாசல்: முனியாது மூரித்தாள் கோமின்' |முனியாது . சினவாமல்; மூரித்தாள் - உறுதியான தாழ்ப்பாள்; கோமின் - பூட்டுங்கள்) என்று எமபடர்கட்கு ஆணை பிறப்பிக்கும் பொய்கையாரின் எக்களிப்பை நினைவூட்டுவதாகவும் அமைகின்றது. நரகத் திற்கு நேரான வழியின்றி அடைத்துவிட்டது பக்தி என்பது 81. முதல் திருவந். 95 82. டிெ . 87