பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவர் ஏற்றிய மொழிவிளக்கு 139. அருள்புரிந்த சிந்தை அடியார்மேல் வைத்து பொருள்தெரிந்து காண்குற்ற அப்போது - இருள் திரிந்து கோக்கினேன்; நோக்கி நினைந்தேன் அது ஒண்கமலம் ஒக்கினேன் என்னையுமங் கோர்ந்து.”* (சிந்தை-திருவுள்ளம்; பொருள் தெரிந்து.பொருளற்ற எங்களைப் பொருளாகப் பற்றி; காண்குற்ற அப்போது-கடாட்சித்த காலத்தில்; இருள்திரிந்து அஞ்ஞானம் மாறி, ஒண்கமலம்.அழகிய திருவடி களை; ஒர்ந்து-மெய்ப்பித்து; என்னை.ஆன்மாவை: ஒக்கினேன்.சமர்ப்பித்தேன்.) என்று பேசுவர் பூதத்தாழ்வார். எம்பெருமானைக் கண்டு அவன் திருவடித் தாமரைகளை அதுசந்திக்கப் பெற்றேன்' என்கின்றார். இப்படிப்பட்ட அன்பே இவருடைய இதய மாகிய மலரின் வாசனையாகும்; இதுவே இறைவனை மானசீகமாக நேரில் காண வகை செய்தது. தம்மையும் கடந்து பொங்கிய தெய்வீக அன்பே அவருக்குத் தாரகமாக அமைந்து இவ்வுலகப் பற்றில்லாமல் திரிந்து கொண்டிருக்கச் செய்தது. உலகமும் இவரை பூதத்தார் என்றும் பூதயோகி என்றும் அழைத்தது வியப்பன்று. மாமல்லபுரத்தில் தோன்றிய இந்த மகானின் இயற்பெயர்கூட நமக்குத் தெரியாது. இத்தகைய பெரியாரைத் திருவரங்கத் தமுதனார், இறைவனைக் காணும் இதயத்(து) இருள்கெட ஞானம்என்னும் நிறைவிளக் கேற்றிய பூதத்திருவடி : கோண-நேரில் காண; இருள்-அஞ்ஞானம்; ஞானம். பரஞானம்; நிறை விளக்கு-பூரண தீபம்: பூதம். பூதத்தாழ்வார்) 84. இரண். திருவந். 59 85. இராமாதுச. நூற். 9