பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவர் ஏற்றிய மொழிவிளக்கு iái கின்றார்; புருஷகார பூதையான பெரியபிராட்டியாரைக் கண்டேன்; அவளுடைய சேர்க்கையாலே நிறம் பெற்ற திருமேனியைக் கண்டேன்; பச்சைமாமலையில் தோன்றி ஒளிவிட்டுக் கிளருகின்ற எழுஞாயிறு போலே விளங்கா நிற்பதாய் இருவருடைய ஒளியும் கலந்து விளங்கா நின்றுள்ளதான அழகிய நிறத்தையும் கண்டேன்; இந்த சேர்த்தியழகுக்கு என்ன தீங்கு வருகின்றதோ என்று அஞ்சிப் போர்க்கோலம் கொண்டு கண்டார்மேல் சீறி விழாநின்ற வனாய், சாமளமான அவன் வடிவிற்குப் பொருத்த மாகும்படி .ெ பாற் .ெ கன் ற நிறத்தையுடையவனான திருவாழியாழ்வானையும் கண்டேன்; கைத்தலத்திலிருந்து கொண்டே பெருமுழக்கமிட்டுப் பகைவர்களை உயிர் மாளப் பண்ணும் திருச்சங்காழ்வானையும் கண்டேன்' என்கின்றார் தம் பெருமகிழ்ச்சிக்குப் போக்குவீடாக, பேயாழ்வாரின் இந்த அநுபவப் போக்கில்தான் அவருடைய பல பாசுரங்கள் அமைகின்றன. சாத்திரத்தின் அடிப்படையில் வாதித்தோ, சாத்திரத்தைச் சிதைக்கும் போக்கிலோ இறைவன் உண்டு என்றும் இல்லையென்றும் முடிவு கட்டுவோர் இவ்வுலகில் இல்லாமல் இல்லை. ஆனால் ஆன்மிக விடயங்களைத் தர்க்க வாதங்களாலும் பெற்ற கல்வியின் திறமையாலும் நிலைநாட்ட முயல்வதும், மறுக்க முயல்வதும் வீணான செயல் என்பதை யாமுனரின் வாழ்வில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றால் தெளியலாம். ஒரு சமயம் வடநாட்டிலிருந்து ஒரு தர்க்க சாஸ்திரி தென்னாட்டிற்கு வந்தான். அவன் தன் வாக்குத் திறமை யால் எந்தக் கொள்கைய்ையும் அழிப்பான்; ஆதரிப்பான். இவன் ஒரு சமயம் சோழ நாட்டிற்கு வந்தான். அரசவை சாஸ்திரியை வாதுக்கு அழைத்தான். இந்த சாஸ்திரியின் சீடன் ஒருவனே சாஸ்திரியின் ஆடையை அணிந்து கொண்டு துணிவுடன் அரசவையை அடைந்து வாதுக்குத் தயாரான்ான். அச்சிறுவனை நோக்கி சாஸ்திரி புலமைச் செருக்குடன், சிறுவா, நீ எதை "ஆம்" என்தாலும், நாம்