பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/187

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


144 ஆழ்வார்களின் ஆரா அமுது இத்தகைய எம்பெருமானைக் காண்பதற்கு ஞானம். வேண்டும். ஞானம் பிரகாசிப்பதற்கு உள்ளம் களங்க மற்றிருத்தல் வேண்டும், இதற்கு வழி என்ன? நான்மறை. களை நன்கு ஓதி உணர்ந்து, அவற்றின் பொருள் களையும் நன்குணர்ந்து, இந்திரியங்களைப் பட்டிமேய. வொட்டாதபடி தடுத்து அவனைக் காணப் புகல்வேண்டும். ஆழ்வார் கூறுவார்: அறிவென்னும் தாள்கொளுவி ஐம்புலனும் தம்மில் செறிவென்னும் திண்கதவம் செம்மி-மறையென்றும் கன்கோதி கன்குணர்வார் காண்பரே நாடோறும் பைங்கோத வண்ணன் படி?? !தாள்.தாழ்ப்பாள்; கொளுவி - பூட்டி, தம்மில். தமக்குள், செறிவு-அடக்குதல்; திண்.வலிவான; செம்மி.இறுக அடைத்துi என்று. நல்ல ஞானம் பெற்றவர்களுடைய புலன்கள் பட்டிமேய வொட்டா வாகையால் அறிவைத் தாழ்ப் பாளாக உருவகித்தார். இக்கருத்தையே சற்று விளக்க, 母f了莎。 ஒர்த்த மனத்தராய் ஐந்தடக்கி ஆராய்ந்து பேர்த்தால் பிறப்பேழும் பேர்க்கலாம்.' (ஒர்த்தமனம்-அநுசந்திக்கின்ற மனம்; பேர்த்தால். சம்சாரத்தினின்றும் நெஞ்சைத் திருப்பிக் கொண் டால்; பேர்க்கலாம்-தொலைத்து விடலாம்) என்று உறுதியும் கூறுவார். இதற்கு வழி காட்டும், போக்கில், 90. மூன். திருவந். 12 91. டிெ.79