பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

ஆழ்வார்களின் ஆரா அமுது

திருக்கண்டேன் எனநூறும் செப்பினான் வாழியே! சிறந்தஐப் பசியிற்சதயம் செனித்தவள்ளல் வாழியே! டிருக்கமழும் மயிலைநகர் வாழவந்தோன் வாழியே! மயற்கரிய நெய்தல்தனில் வந்துதித்தான் வாழியே! நெருக்கியிடவே இடைகழியில் நின்றசெல்வன் வாழியே! கேமிசங்கன் வடிவழகை கெஞ்சில் வைப்போன் வாழியே! பெருக்கமுடன் திருமழிசைப் பிரான்தொழு வோன் வாழியே! பேயாழ்வார் தாளிணைஇப் பெருநிலத்தில் வாழியே!” என்று வாழ்த்தி மகிழ்கின்றது. வைணவ உலகம். முதலாழ்வார்கள் மூவரையும் ஒரு மாபெரும் பக்தி யுகத்தைத் தோற்றுவித்த மூல புருடர்களான பாகவத மும்மணிகள் என்று கொள்வது மிகப் பொருத்தமாகும். 102. அப்புள்ளை - வாழித் திருநாமம்.3