பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

ஆழ்வார்களின் ஆரா அமுது


ஆழ்வார்களில் திருமழிசையாழ்வார் என்பவர் ஒருவர். திருமழிசை என்ற ஊரில் பிறந்து இளமைப் பிராயத்தைக் கழித்தவர். இவருக்குப் பக்திசாரர் என்ற ஒரு காரணப் பெயரும் உண்டு காரணத்தைப் பின்னர் விளக்குவேன். திருமழிசையின் பெருமையைப் பற்றித் திருக்கச்சி கம்பிகள்? என்ற ஆசாரியப் பெருமகன் ஒரு தனியனில் குறிப்பிட் டுள்ளதை எடுத்துக்காட்ட விரும்புகின்றேன். வரலாற்றுப் பின்னணி: ஒரு சமயம் அத்திரி, வசிட்டர், பிருகு, பார்க்கவர், புலத்தியர், அங்கிரசு முதலான பிரம இருடிகள் பலரும் சத்தியலோகம் சென்று நான்முகனைத் திருவடி தொழுது கூப்பிய கையராய், *நாங்கள் பூலோகத்தில் தவம் இயற்றக் கருதுகின்றோம். சிறந்த இடத்தை உறுதி செய்து சொல்ல வேண்டும்' என்று வேண்டினர். நான்முகனும் தேவசிற்பியான விசுவகர்மாவை வரவழைத்து இம்முனிவர்கள் காணுமாறு துலாக்கோல் நாட்டி ஒரு தட்டில் பூமியையும் மற்றொரு தட்டில் திருமழிசை என்னும் ஊரையும் வைத்து நிறுக்கச் செய்தார். தேவதச்சன் அங்ங்ணம் செய்த அளவில் பூமிவைக்கப்பட்ட தட்டு இலேசுபட்டு மேலோங்கி நின்றது; திருமழிசை வைக்கப்பட்ட தட்டு கனம் பெற்றுத் தாழ்ந்து நின்றது. இவ்வேறுபாட்டை நான்முகன் அவர்கட்குக் காட்டி திருமழிசைக்கு மஹிலார rேத்திரம்’ என்ற காரணப் பெயரிட்டு அவண் சென்று தவம் இயற்ற அநுமதி 1. திருமழிசை: இந்த ஊர் சென்னை - திருவள்ளுர் (திருஎவ்வளுர்) என்ற பேருந்து வழியில் பூவிருந்தவல்லியைத் தாண்டி இருக்கும் ஊர். 2. திருக்கச்சி நம்பிகள்: உடையவர் ஆசிரியர்களில் ஒருவர். பிறந்த ஊர் பூவிருந்தவல்லி. பிறப்பால் பொன் வாணிகர். கச்சிநகர் பேரருளாளனுக்கு ஆல வட்ட கைங்கரியம் புரிந்து வந்தவ்ர். ஆளவந்தாரின் திருவடி சம்பந்தி.