பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/196

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பக்திசாரர் #53 தந்து அவர்களை அனுப்பினான். இந்த வரலாற்றை நினைவு கூர்ந்த வண்ணம் திருக்கச்சி நம்பிகள், உலகும் மழிசையும் உள்ளுணர்ந்து, தம்மில் புலவர் புகழ்க்கோலால் தூக்க-உலகுதன்னை வைத்தெடுத்த பக்கத்தும், மாகீர் மழிசையே வைத்தெடுத்த பக்கம் வலிது.” (புகழ்க்கோல் . துலாக் கோல்). என்று தனியன் அமைத்துக் காட்டினார். மாமுனிவர்களும் திருமழிசையை அடைந்து ஐம்பொறி களை அடக்கி அருந்தவம் புரிகின்றனர். இவர்களுள் யார்க்கவர் என்பார் தீர்க்கலத்ரம் என்ற பெருவேள்வி இயற்றி 3. திருச்சந்த விருத்தத் தனியன். காஞ்சி புராண ஆசிரியர் கச்சிநகரின் அழகை அறுதியிட நான்முகன் இத் தகைய யுக்தியைக் கையாண்டான் என்பர். நான்முகனே படைத்த உம்மூர் உலக நகராகிய அமராவதியும் காஞ்சியும் அழகுமிக்க நகரங்கள். எதன் அழகு மிக்கது என்பதை அறிய இரண்டையும் தராசுத் தட்டில் வைத்துத் துரக்க, காஞ்சி நகரையுடைய தட்டு கீழே வந்தது; அமராவதி தட்டு மேலே போயிற்று. இதனைச் சிவஞான முனிவர், கச்சிமா நகர் ஓர் தட்டும் கடவுளர் உலகோர் தட்டும் வைச்சுமுன் அயனார் தூக்க மற்றது மீது செல்ல நிச்சயம் முறுகித் தாழ்ந்து நிலமிசை விழும்.இவ் ஆரை இச்சகத் துர்க ளோடு எண்ணுதல் மடம்ைப் பாற்றே (காஞ்சி புராணம் - திருநகரப்படலம். செய்.1) காஞ்சியம் பதியும் அமராவதியும் இயல்பாகக் கீழும் மேலும் இருப்பதற்கு கவிஞர் சமத்காரமாகக் கூறும் கற்பனை அநுபவித்து மகிழத்தக்கது.