பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/197

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

ஆழ்வார்களின் ஆரா அமுது


அதனால் வாசுதேவனை ஆராதிக்கின்றார். இதனைக் கண்டு பொறாமை மிக்க தேவர்கள் அத் தவ ஒழுக்கத்தை. அழிக்குமாறு அரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை முதலிய அப்சர மாதர்களை ஏவுகின்றனர். அவர்களும் அங்ங்னமே திருமழிசைக்குப் போந்து பார்க்கவரின் தவத் தைக் குலைக்க முயலுகின்றனர். இவர்களால் எம்பெரு. மானது திருவடித் தாமரைகளில் அழுந்தி நின்ற முனிவரின் இதயத்தை மீட்க முடியாமல் அச்சமும் நாணமும் கொண்டு மீண்டு செல்கின்றனர். ஆயினும், அவர்களுடன் வந்த அதி நிபுணையான கனகாங்கி என்னும் கட்டழகி விஷ்ணுவைப்போல் வேண்டிய உயிர்களை மோகிப்பிக்க வல்லமையுடையவள். இவள் மன்மதன், வசந்தகாலம், தென்றல், திங்கள் இவற்றின் துணை கொண்டு அம் முனிவர் முன்னிலையில் ஆடல் பாடல் முதலிய விநோதங்களைச் செய்கின்றாள். அப்பொழுது விதிவசத்தால் முனிவரின் தியானம் கலைகின்றது. மங்கையின் இசை விருந்தினை அதுபவித்து அவளது அழகினைக் கண்டு காமுறுகின்றார். யோகம் காற்றில் பறக்கின்றது. போகம் அவரை ஆட் கொள்ளுகின்றது. முனிவர் அம் மங்கையின் மோக வலையில் சிக்கிச் சில காலம் தம்மை மறந்த நிலையில் மன்மத பரவசராய்க் கிடக்கின்றார். திருமழிசை பிரான் பிறப்பு: அக்காலத்தில் சூல் கொண்ட அம்மங்கையின் திருவயிற்றினின்றும் தைத்திங்கள் மக நட்சத்திரத்தில் சுதர்சனம் என்னும் திருவாழியின் அம்ச மாகக் கருப்பம் வெளியாகின்றது, அஃது உறுப்புகளொன்று மின்றிப் பிண்டமாக இருந்ததனால் அத்தேவ மங்கை அதனை வெறுத்து அருகிலுள்ள பிரப்பம் புதரில் எறிந்து விட்டுத் தன்னுலகம் சென்று விடுகின்றாள். பின்னர் தம் வசமிழந்த பார்க்கவர் தவம் இழந்ததற்கு வருந்தி வேறோ ரிடம் சென்று மீண்டும் தவம் இயற்றுகின்றார். புதரில் வீசி யெறியப்பெற்ற தசைப் பிண்டம் சிறந்ததோர் ஆண் குழந்தை வடிவமாகப் பரிணமித்து உயிர் பெறு: