பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/198

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பக்திசாரர் 155 கின்றது. பசி, நீர் விடாய்களால் பரிதவித்துத் தனியே அழுது கொண்டிருப்பதை அவ்விடத்துக்கருகே திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சகந்நாதப் பெருமாள் பிராட்டியுடனே எழுந்தருளி அக்குழந்தையைக் குளிர்க் கடாட்சித்து அதன் பசி தாகங்களைத் தவிர்த்துத் தமது திருமேனியைக் காட்டித் தேற்றி மறைந்தருள்கின்றார். பின்னர் அத்தெய்விகக்குழந்தை அப் பெருமானது பிரிவை ஆற்றாமல் மீளவும், தேம்பித் தேம்பி அழுது கொண்டு இருந்தது. வளர்ப்பு: அப்போது பிரம்பறுக்க வந்த திருவாளன் என்னும் குறவன் தான்-மேற்கொண்டிருக்கும் தொழிலுக் காகப் பிரம்பறுக்க வருகின்றான். குழந்தை அழுகுரலைக் கேட்டு அருகில் வந்து குழந்தையை வாரி எடுக்கின்றான். அவனோ மக்கட் பேறு வாய்க்கப் பெறாதவன். குழந்தையைத் தன் இல்லத்திற்கு எடுத்து வந்து தன் மனைவியான பங்கயச் செல்வியிடம் தருகின்றான். அவளும் * பிள்ளையில்லாத நமக்கு இது தெய்வத்தின் அருளால் கிடைத்தது' என்று சொல்லிய வண்ணம் அதை வாங்கி அதனை அன்புடனும், ஆதரத்துடனும் வளர்த்து வருகின்றாள். இக்குழந்தையின் பால் உண்டான பேரன்பி னால் அப் பெண்மணிக்குப் பால் சுரக்கின்றது. அவளும் தன் முலைப்பாலைக் குழந்தைக்குக் கொடுக்க முயலும் போது அத் தெய்வக் குழவி அதை அங்கீகரிக்க மறுக்கின்றது. பின்னர் பகவத் குணாநுபவத்தையே தாரகமாகக் கொண்டு பசி தாகமின்றி அழுதல், அரற்றுதல், கூவுதல், பேசுதல் முதலியவை இன்றி இளஞாயிறு போல் திருமேனி ஒளி விளங்க வளர்ந்து வருகின்றது. ஆனால் இக்குழந்தைய ஆழ்வாரான பிறகு பாடிய பாசுரத்தில், குலங்க ளாய ஈரி ரண்டில் ஒன்றி லும்பி றந்திலேன்' (ஈரிரண்டு . நான்கு) 4. திருசந். விருத். - 90.