பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. xvii நெறியற்ற கற்பனைகள் தமைவிளக்கி விலக்கிடுமோர் நேர்மை காட்டிக் குறிக்கோளும் தூய்தாகக் கொள்கைகளும் சீராகக் கொள்ளக் கண்டோம்!

துறையூரும் சீர்காரைக் குடிநகரும் வேங்கடமும் துய்த்த பேறு குறையில்லாப் பெரும்பேறாம் சுப்புரெட்டி யார்தொண்டு கொண்ட தாலே! நிறைபெறவே ஒய்வுநாள் இலக்கியங்கள் ஆய்வெனவே நெறிப்படுத்தி முறையாகத் தமிழ்நாடு முழுவதற்கும் பயனிந்தார் நீடு வாழ்க!

வாழ்த்து : 36. தில்லைப் பதியானும் சீர்வேங் கடத்தானும் இல்லைவே றொன்றாய் இருந்திங்கே-நல்ல குணந்திகழும் சுப்புரெட்டி யார்க்குத் தருக மணங்கமழும் பல்லாண்டு வாழ்த்து! 2/141, கந்தசாமி நகர் பால வாக்கம் சென்னை-600 4ே1 நாரா. நாச்சியப்பன் 6-7.1987