பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/204

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பக்திசாரர் క్ష கூறினோமல்லவா? இதைச் சிவபெருமானே வழங்கிய தாகவும் ஒரு கதை நிலவுகின்றது. ஒரு சமயம் சிவபெருமான் தம் துணைவியாகிய பார்வதி தேவியாருடன் விடையின்மீது அமர்ந்து கொண்டு விண் வழியே செல்லுகின்றார். பார்வதி தேவியார் இவரது தவ ஒழுக்கத்தைக் கண்டு அதிசயிக்கின்றாள். தன் கணவனை நோக்கி இவர் யாரோ? என்று வினவ, சிவபெருமானும் இப்பெரியார் நாராயணனுக்கு அடிமைப் பட்டவர் என்று சொல்லுகின்றார். உடனே அம்பிகை, இேவருக்கு நாமும் காட்சி நல்கி ஏதேனும் வரமளித்துப் போவோம் என்று கூறுகின்றாள். சிவபெருமானும் அவளது விருப்பப்படிச் செய்ய உடன்படுகின்றார்; அவர் எதிரில் தோன்றவும் செய்கின்றார். இவர் சிவபெருமானைப் பார்த்தும் பாராதவருமாக இருக்கின்றார். ஒரு கந்தைத் துணியைத் தைப்பதில் செயற்பட்டுக் கொண்டு பாராமுக மாக இருக்கின்றார். உனக்கு அருள் செய்ய வந்த எம்மை நீ உதாசீனம் செய்வது தகுதியோ?” என்று சிவபெருமான் கூற, மழிசையாரும் உம்மாலாக வேண்டியது ஒன்றுமில்லை யாதலால் அசட்டையாக இருந்தேன்’ என்று மறுமொழி தருகின்றார். பின்னர் கங்காதரர் "நம் வரவு வீண் போவதன்று; உனக்கு விருப்பமான வரம் பெற்று வாழ்வாய்' என்று மேலும் கூறுகின்றார். அடுத்து, ஆழ்வார், பரமபதம் அருளவல்லீராயின், அருள்வீர்” என வேண்டுகின்றார். அதற்குக் கயிலைநாதர் அது நம்மால் தரத்தக்கதன்று; அது தருவதற்கு உரியவர் சீமந் நாராயணன் ஒருவனே; ஆதவின் வேறு வரம் வேண்டுதி" என்று கூறுகின்றார். ஆழ்வார் புன்முறுவல் செய்து, அம் முக்தியைப் பெறுவதற்கு நீண்ட காலம் இவ்வுலகில் உயிர் வாழ்ந்து பெருந்தவம் புரிவதற்கு நீண்ட ஆயுளையாவது அளித்தருளும் என்று வேண்டுகின்றார். அதுகேட்டு கண்ணுதலப்பன் அது கருமத்தின் அடியாக நடப்பதேயன்றி வளர்த்தத் தக்கதன்று; வேறு வேண்டுவதை விளம்டிவாய்: Ti