பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/208

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பக்திசாரர் #55 வார்கள் மழிசை பிரானிடம் விடைபெற்றுக் கொண்டு மீண்டும் திருத்தலப் பயணத்தைத் தொடர்கின்றனர். காஞ்சி நிகழ்ச்சிகள் : திருமழிசை யாழ்வாரும் பூதத் தாழ்வார் அவதரித்த மாமல்லபுரம் சென்று அங்குள்ள எம்பெருமானை வழிபடுகின்றார். பின்னர் தாம் பிறந்த ஊராகிய திருமழிசைக்கு வருகின்றார். தாம் வழக்கம் போலச் சாத்திக் கொள்வதற்குத் திருமண்வேண்டிச் சில இடங்களில் சோதிக்கும்போது கிடைக்கவில்லை. இதனால் மனம் கலங்கின ஆழ்வார் கனவில் திருவேங்கட முடையான் சேவை சாதித்து, ஆழ்வீர், கச்சி வெஃகாவை அடுத்த பொற்றாமரைப் பொய்கையில் உள்ளது" என்று அருளிச் செய்கின்றார். பொய்கையாழ்வார் பிறந்த இடத்தை இவர் சேவிக்கவேண்டும் என்று வேங்கடம் மேவிய விளக்கு" வழிகாட்டியது போலும்! ஆழ்வாரும் காஞ்சி சென்று எம்பெருமான் குறிப்பிட்ட இடத்தில் திருமண் கண்டு களித்து எடுத்து வந்து தரித்துக் கொண்டு சில காலம் திருமழிசையில் பகவதநுபவத்துடன் தங்கிவிடுகின்றனர். பின்னர் திருமழிசையை விட்டுக் காஞ்சி சென்று திருவெண் காவில் திருவணைப் பள்ளியில் கண்வளரா நின்ற பெருமாளைச் சேவித்துக் கொண்டும் அப்பிரானையே தியானித்துக் கொண்டும் பல ஆண்டுக் காலம் அங்கேயே தங்கியிருக்கின்றார். இக்காலத்தில் திருமழிசையில் தமக்கு நண்பனும் சீடனுமாக இருந்த கணிகண்ணனும் காஞ்சிக்கு வந்து இவருக்குப் பணிவிடைகள் செய்து வருகின்றான். அக் காலத்தில் தலை நரைத்து உடல் திரைத்துப் பருவம் முதிர்ந்த கிழவியொருத்தி ஆழ்வாருடைய திருவடிகளில் பரமபக்தி கொள்கின்றாள். ஆழ்வார் தங்கியிருந்த இடத்தைத் திருவலகிடுதல், மெழுகுதல், கோலமிடுதல் போன்ற கைங்கரியங்களை நாள்தோறும் செய்து கொண்டு வருகின்றாள். ஒரு நாள் ஆழ்வார் திருக்கண் விழித்த