பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/211

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

ஆழ்வார்களின் ஆரா அமுது


ஆழ்வார், நானும் வெஃகணைக் கிடக்கும் பெருமாளை எழுந்தருள்வித்துக் கொண்டு நின்னுடன் வருவேன்' என்று உரைத்துத் திருக்கோவிலினுட் சென்று அடியவர்க் கெளியனான எம்பெருமானைத் திருவடி தொழுகின்றார். கணிகண்ணன் போகின்றான் காமருபூங் கச்சி மணிவண்ணா கிேடக்க வேண்டா-துணிவுடைய செங்களப் புலவனும் போகின்றேன் யுேமுன்றன் பைங்காகப் பாய்சுருட்டிக் கொள் என்று வேண்டுகின்றார். எம்பெருமானும் ஆழ்வாரின் வேண்டுகோட்படி தம் அறிதுயில் கலைந்து எழுந்துவர மூவரும் நகரை விட்டு அகன்று அருகிலுள்ள ஓரிடத்தில் வாழ்ந்து வருகின்றனர். இங்ங்ணம் பெருமாளும் ஆழ்வாரும் அவரடியானும் அப்பதியை விட்டு அகன்று போகவே, கச்சியம்பதியிலுள்ள மற்றை எம்பெருமான்களும் அவ்வூரை விட்டு வெளியேறுகின்றனர். இதனால் அந்நகரம் ஒளி யிழந்து போகின்றது. அங்கு மற்றும் பல திருக்கோயிலில் இருக்கின்ற தேவதைகளின் சாந்நித்யமும் இல்லையாய் விடுகின்றது. கதிரவனும் அவ்வூரைக் கண்ணெடுத்துப் பாராதவனாகவே, ஊர் நீளிரவாய் விடுகின்றது. இதைக் கண்டு மன்னன் மிகவும் மனங்கவன்று அமைச்சர்களுடன் அவர்கள் இருக்கும் இடத்தைத் தேடி அடைந்து கணி கண்ணன் காலில் விழுந்து தனது அபசாரத்தைப் பொறுத் தருளுமாறு பலவாறு வேண்டிக் கொள்ளுகின்றான். கணிகண்ணனும், மீண்டெழுந்தருளும்படி ஆழ்வார் பக்கல் விண்ணப்பம் செய்கின்றான். அவரும் அவ்வேண்டுகோளை ஏற்றுப் பாம்பனைப் பள்ளியானை (சேஷசாயியை) நோக்கி, கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் கச்சி மணிவண்ணா கிேடக்க வேண்டும்-துணிவுடைய செங்காப் புலவனும் போக்கொழிந்தேன் யுேமுன்றன் பைங்காகப் பாய்விரித்துக் கொள் என்று முன் பாடிய பாட்டையே சற்று மாற்றிப் பாடி விண்ணப்பிக்கின்றார். எம்பெருமானும் அதற்கு உடன்