பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

ஆழ்வார்களின் ஆரா அமுது


பின்னர் இவர் வாசம் செய்த தலங்கள் மூன்று என்று குறிப்பிடலாம். இவற்றுள் ஒன்று தம் குருவான பூதத் தாழ்வாரின் ஊரைச் சார்ந்த திருவல்லிக்கேணி. இவர் வாழ்ந்த இரண்டாவது தலம் பொய்கையாழ்வார் அவதரித்த திருக்கச்சி. தமது குருவும் பூதத்தாழ்வாரும் பாடிப் போற்றியுள்ள திருக்குடந்தையையே தமது நிலை யான இருப்பாகக் கொண்டு இங்கேயே (1) திருச்சந்த விருத்தம் (2) நான்முகன் திருவந்தாதி என்ற இரு பிரபந்தங் களையும் இயற்றுகின்றார். இதனால் கும்பகோணத்தைத் *திருமழிசைப்பிரான் உகந்த இடம் என்று பேசுகின்றார் வியாக்கியானச் சக்கரவர்த்தி பெரியவாச்சான்பிள்ளை. கும்பகோணத்திற்குக் குடமூக்கு என்றும் குடமூக்கில்" என்றும் திருநாமங்கள் உண்டு. எனவே திருமழிசை யாழ்வார் குடமூக்கிற் பகவர் (கும்பகோணத்து பாகவதர்) என்று ஒரு சமண ஆசிரியர் குறிப்பிடுகின்றார். முக் காலமும் உணர்ந்த முனிவர்களில் ஒருவர் என்றும் பாராட்டுகின்றார் அந்த ஆசிரியர். இதனால் குருபரம் பரைக் கதைகள் தோன்றுவதற்கு முன்னரே பொய் கையார், பூதத்தாரைப்போல் திருமழிசையாரும் தமிழர் களால் பெரிதும் போற்றப் பெற்றனர் என்பதை அறிய முடிகின்றது. அருளிச் செயல்கள் : பெரியோர்களே, இனி, இவர் தம் அருளிச் செயல்களைப் பற்றிச் சிறிது கூற எண்ணு கின்றேன். திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி என்பவை இவர்தம் அருளிச் செயல்கள் என்பதை முன்னர்க் குறிப்பிட்டேன். இவற்றுள் முன்னது சந்த விருத்தத் தாலான 120 பாசுரங்களைக் கொண்டது. ஒதுவார் உள்ளத்தில் உணர்ச்சியைக் கிளர்ந்தெழச் செய்யும் பான்மையது. இது முதலாயிரத்தில் பெருமாள் திரு மொழியை அடுத்து இடம் பெற்றுள்ளது. பின்னது 96. வெண்பாக்களைக் கொண்டது. இஃது இயற்பாத் தொகுதியில் முதலாழ்வார் பிரபந்தங்களையடுத்து இடம்