பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/217

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#74 ஆழ்வார்களின் ஆரா அமுது திருவேங்கடம்: திருவேங்கடம் பற்றிய பக்திசாரரின் அநுசந்தானம் மிகவும் அற்புதமானது. வெற்பென்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி கிற்கின்றேன்' (வெற்பு . மலை; வீடு . மோட்சம்) என்கின்றார். பசு மலை, குருவி மலை என்று பல மலை களின் பெயர்களைச் சொல்லும் அடைவிலே திருவேங்கட மாமலை என்று என் வாயில் வந்து விட்டது. இதனால் பரமபதமும் எனக்குச் சித்தித்து விட்டது" என்று கூறி இனியராகின்றார். இந்த அநுபவத்தைக் கைமேல் கண்டவர் நம்மையும் அம் மலைக்குச் சென்று வணங்குமாறு ஆற்றுப்படுத்துகின்றார். சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை கின்று வினைகெடுக்கும் கீர்மையால் ' (வினை - பாவம்) என்பது ஆழ்வாரின் திருவாக்கு. வேங்கடம் என்ற சொல்லின் பிற்காலப் பொருளை விளக்குவதுபோல் உள்ளது இப் பாசுரப் பகுதி. இதனை மேலும் அரண் செய்வதுபோல் வேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதும்' என்று இன்னொரு பாசுரத்தின் அடி அமைந் திருப்பதையும் காண்கின்றோம். திருச்சந்த விருத்தத்திலும் இவர் வேங்கடம் அடைந்த மால்பாதமே அடைந்து நாளும் உய்மினோ' என்று ஆற்றுப் படுத்துவதையும் நாம் காணாமல் இல்லை. இம்மலை வானோர்க்கும் வைத்த மாநிதியாயிருப்பதாக இன்னொரு பாசுரத்தில் குறிப்பிடுகின்றார். 24. நான் திருவந். 40 25. நான். திருவந், 42 26. டிெ, 81 27. திருச். விருத், 81