பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்திசாரர் 175. தண்ணருவி வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு?? என்று பேசுவதையும் காண்கின்றோம். வேங்கடமலையின் எழிலும் கருப் பொருள் வளமும் இந்த ஆழ்வாரின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. ஊர்: அல்லது பதி’ என்ற கலம்பகத் துறைச் செய்யுள் போல் அமைந்துள்ளது ஒரு பாசுரம் நன்மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும் பொன்மணியும் முத்தமும் பூமரமும் - பன்மணிே ரோடுபொரு துருளும் கானமும் வானரமும் வேடு முடைவேங் கடம்." திருமலை மணிவண்ணனுடைய திருப்பதியில் யாளிகள், சிங்கங்கள், நவரத்தினங்கள், மலர் மரங்கள், நவமணி களைக் கொழித்துக் கொண்டு வீழும் அருவிகள் பாயப் பெற்ற காடுகள், குரங்குகள், வேடர்கள் ஆகிய இவற்றிற்குக் குறை இல்லை என்று இதில் கூறுவதைக் காண்கின்றோம். திருமலையின் இயற்கைக் காட்சி இந்த ஆழ்வார் திருவுள்ளத்தையும் கவர்கின்றது. அங்ங்ணம் பெற்ற களிப்பினால், எக்களிப்பினால், கற்பனை நயம் தோய்ந்த காட்சியை அவர் நமக்குப் புலப்படுத்துகின்றார். மாமதியை மாலவனுக்கு மணி விளக்காக வைக்கும் நோக்கத்துடன் அந்த மதியை எட்டிப் பிடிப்பதாகத் தும்பிக்கையைத் துரக்கிய வண்ணம் நிற்கின்றது ஒரு யானை அந்த யானை யைப் பிடிப்பதற்காக நாற்புறமும் வேடர்கள் சூழ்ந்து கொள்கின்றனர். அந்த யானையின் மீது அம்பு தொடுக்கும் நோக்கத்துடன் குறவர்கள் விற்களை எடுத்துக் கொண்டு செல்லுகினறனர். இந்த நிகழ்ச்சியைக் காட்டும் முகத்தான் திருமலை மதி மண்டலத்தை எட்டியிருக்கின்ற 28. நான். திருவந். 45 29. டிெ 47 30. டிெ 46