பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

rix ஆழ்வார்களின் ஆராஅமுது என்ற இந்த நூல் பேராசிரியர் டாக்டர் க. சுப்பு ரெட்டியார் தாம் திருப்பதியில் பணியாற்றிய ஒரு காலப் பகுதியில் திருப்பதியைச் சுற்றி யுள்ள ஐந்து இடங்களில் நிகழ்த்திய ஆறு சொற்பொழிவு கள் அடங்கியது. ஒரு காலத்தில் ஒரு சில இடத்தினருக்குப் பயன்பட்ட பொழிவுகள் எல்லா இடத்தினருக்கும் எல்லாக் காலத்தினருக்கும் பயன்படட்டும் என்னும் பெருநோக்கால் இந்த ஆறு பொழிவுகளும் நூல் வடிவம் பெற்றுத் தமிழ் மக்களிடையே உலா வருகின்றன. ஆழ்வார்கள் அராஅமுதப் பெருமானை எப்படி அதுபவித்தார்கள், அவ்வநுபவ ஆனந்தத்தை வெளியிடு வதற்கு எத்தகைய உயர்ந்த பாசுரங்களைப் பயன்படுத்தி னார்கள், அப்பாசுரங்கட்கு ஆசாரியப் பெருமக்களின் மணிப்பிரவாள நடையிலமைந்த வியாக்கியானங்கள் எப்படி துட்பப் பொருளைக் காட்டியுள்ளன என்பவை போன்ற கருத்துகளை தெள்ளத் தெளிந்த ஆற்றொழுக்கான தீந்தமிழ் நடையில் விளங்க வைக்கும் ஆற்றலை இயல்பாகப் பெற்றவர் பேராசிரியர் டாக்டர் ரெட்டியார். ஆழ்வார் பெருமக்கள் மங்களா சாசனம் செய்தருளிய திவ்விய தேசங்களை நேரில் சேவித்து அங்கு நடந்தும், நின்றும், இருந்தும், கிடந்தும் சேவை சாதிக்கும் எம்பெருமான்களின் திருவருளுக்குப் பாத்திரமானவர். எழுபது அகவையைத் தாண்டும் நிலையில் எழுபத்தெட்டு நூல்களைப் படைத்த திருக்கரத்தினர். வாழ்நாளில் ஒரு சிறுபொழுதும் வீழ்நாள் படாமல் நற்றொண்டாற்றும் நல் இயல்பினர். உலைவின்றித் தாழாது உஞற்றி ஊழையும் உப்பக்கம் கண்டவர். துறையூர் உயர்நிலைப்பள்ளியை உருவாக்கி, திரு வாக்கி, அதன் தலைமையாசிரியராக நின்று பணியாற்றி அப்பக்கப் பெருமக்களின் அன்புக்கும் மரியாதைக்கும் பாத்திரரானவர். காரைக்குடி ஆசிரி ய ப் பயிற்சிக்