பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/220

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்திசாரர் 177 கூன்.அகம் புகத்தெறித்த கொற்றவில்லி அல்லையே ’’ கொண்டைகொண்ட கோதைமீது தேனுலாவு கூனி கூன் உண்டைகொண்டு அரங்கஒட்டி உள்மகிழ்ந்த நாதன் ." என்ற பாசுரங்களில் இதனைக் காணலாம். இதையே கம்ப நாடன் தனது காவியத்தில் இடம் தருகின்றான். இராம னுக்கு தசரதன் முடிசூட்ட நினைக்கின்றான். அதைத் தடுக்க நினைத்துச் சூழ்ச்சியில் இறங்குகின்றாள் மந்தரை. பழைய நிகழ்ச்சியை நினைத்து கடுஞ்சினம் கொள்ளுகின்றாள். இதனை, தொண்டைவாய்க் கேகயன் தோகை கோயின்மேல் மண்டினாள் வெகுளியின் மடித்த வாயினாள் பண்டைநாள் இராகவன் பாணி வில்லுமிழ் உண்டையுண் டதனைத்தன் உள்ளத்து உள்ளுவாள் : (வெகுளி.சினம்; பாணி.கை; உண்டை.திரளை; உள்ளுவாள்-நினைக்கின்றாள். என்று காட்டுவான். சுக்கிரீவனுக்கு அரசியல் நீதிகளை எடுத்துரைக்கின்றான் இராமன். அரசியலில் சிறியர் என்று ஒருவரை இகழ்ந்து தீயனசெய்தலால் தீமை விளையும் என்ற உண்மையை தன் ஒழுக்கத்தையே எடுத்துக்காட்டாகத் தருகின்றான். சிறியரென் றிகழ்ந்து நோவு செய்வன் செய்யன் மற்றிக் நெறியிகந் தியானோர் தீமை யிழைத்தலால் உணர்ச்சி நீண்டு 39. திருசந். விருத். 30 40. டிெ. 49 41. அயோத், மந்தரை. 41 12