பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/222

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்திசாரர் ፲፮9 வித்தும் இடல் வேண்டுங் கொல்லோ விடையர்த்த பக்தி புழவன் பழம்புனத்து ' என்ற பாசுரத்தில் இதனைக் காணலாம். இப்பாசுரம், வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம் : என்ற குறளை நினைக்கச் செய்கின்றது. (5) திருமாலின் பெருமையும் வைணவ தத்துவமும் இவர்தம் பிரபந்தங்களில் பரக்கப் பேசப் பெறுகின்றன. இவற்றைக் காட்டுவேன். ஒரு மாபெருங்கடல், அதில் தோன்றிய அலைகள் உலகங்களாம். புற உலகத்தைப் போல் உள்ளுலகமாகிய மனத்தில் நடைபெறும் நிகழ்ச்சி களும் அந்த மாக்கடலில்தான் தோன்றுகின்றன; அடங்கு கின்றன. எல்லையில்லாத சோதி வெள்ளம்; நினைக்கவும் முடியாத சக்தி வெள்ளம்; உயிர்க்கெல்லாம் தாயாகிய கருணை வெள்ளம்; அழகு வெள்ளமும் அதுதான். ஆறித் தோன்றும் அழகும் சீறித் தோன்றும் அழகும் அதில் அடங்கியுள்ளது. தன்னுளே திரைத்தெழும் தரங்கவெண் தடங்கடல் தன்னுளே திரைத்தெழுந்து அடங்குகின்ற தன்மைபோல் கின்னுளே பிறந்திறந்து கிற்பவும் திரியவும் கின்னுளே அடங்குகின்ற கீர்மைகின்கண் கின்றதே ' 45. டிெ - 23 46. குறள் . 85 47. திருச். விருத். 10