பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/223

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

ஆழ்வார்களின் ஆரா அமுது

என்பது பாசுரம். இந்த அழகு வெள்ளம்தான் மாக்கட. லாகிய இறைவன். கருணை வெள்ளத்தில்தான் நிலைத் தினையும் இயங்குதிணையும் தோன்றுதலும் பின்பு அழித லாகிய நிலைகளை அடைந்து இறுதியில் அதே வெள்ளத்தில் அடங்கிவிடுகின்றன என்கின்றார் ஆழ்வார். இந்தக் கருணை வெள்ளத்தைத்தான் திருமழிசை யாழ்வார் ஆதிதேவன் என்றும் தேவன் என்றும் தேவதேவன்' என்றும் குறிப்பிடுகின்றார் தம் திருச்சந்த விருத்தத்தில் இவ்வாறு பொதுவாகக் கூறுகின்றவர் அந்த ஆதிதேவன், பூமிநாதன் (22) ஆழிமேனிமாயன் (24), புண்டரீகன் (33, 55, 57), பற்பநாபன் (32), மேக. வண்ணன் (39) என்று குறிப்பிட்டு திருமாலே முழு. முதற் கடவுள் என்று நிலை நாட்டுகின்றார். இதே கருத்தைத் தான் நான்முகன் திருவந்தாதியிலும் காணமுடிகின்றது. தேருங்கால் தேவன் ஒருவனே என்றுரைப்பர் ஆரும் அறியார் அவன்பெருமை ! என்ற பாடலில் இதனைக் காணலாம். இக்கொள்கையின் அடிப்படையை, கிற்கின்ற தெல்லாம் . நெடுமால் என்று ஓராதார் கற்கின்ற தெல்லாம் கடை. 1ஓராதார் - அறியாதவர்கள்; கடை - கீழானது. 48. திரு. விருத். 17, 22.43, 48 49. டிெ. 50. டிெ. 24, 75 51. நான். திருவந். 2 52. டிெ, 54