பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/224

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சக்திசாரர் #81 என்ற பாசுரத்தால் புலப்படுத்துகின்றார். எல்லாம் கடவுள் மயம்’ என்கின்ற அறிவு கல்வியறிவின் முக்கியமான கூறாகக் கொள்ள வேண்டும். நீயே உலகு எல்லாம்; கின்அருளே கிற்பனவும்: ேேய தவத்தேவ தேவனும்: என்றதால் இக்கருத்து மேலும் உறுதிப்படும். கல்லா தவர்இலங்கை கட்டழித்த காகுத்தன் அல்லால் ஒருதெய்வம் யான் இலேன்என்பதால் இது பின்னும் வலிவு அடையும். இராவணன் முதலானவர்க்கு கல்வி அறிவு இல்லையா? அறிவுத் திறமை யில்தான் குறைவு உண்டா? எனினும் கல்லாதவர் இலங்கை என்கின்றாரே. அது ஏன்? இலங்கையிலிருந்த அரக்கர்கள் அனைவரும் தங்களுடைய தீய நடத்தைகளில் தம் அறிவின்மையை வெளிப்படுத்திக் கொண்டார் களாதலால் இவ்வாறு கூறினார். அங்கே கற்றவன் ஒருவன் தான் இருந்தான். அவன் வீடணன்; அவனையும் துரத்தியடித்து விட்டார்கள் என்பது குறிப்பு. கல்வி சரியான கல்வியாக இருந்தால், சர்வேசுவரன் நூல் வலையில் அகப்படுவானாம். - கற்கின்ற நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் கால்வலையில் பட்டிருந்தேன் ੋrੱ. ** 53. 7ङ्काः திருவந். 20. 54, டிெ. 53. 55. டிெ 40.