பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/225

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


182 ஆழ்வார்களின் ஆரா அமுது என்பதால் இது பெறப்படுகின்றது. சாத்திரங்களாகிய, வலையில் சிக்கிக் கொண்டிருப்பவன் எம்பெருமான். தான் எம்பெருமானுடைய கால் வலையில் அகப்பட்டவன். எம்பெருமான் ஒரு வலையில் அகப்பட்டான்; நான் ஒரு. வலையில் அகப்பட்டேன்" - என்பது சமத்காரமான பேச்சு, பேயாழ்வாரைச் சந்தித்த பிறகு பக்திசாரர். திருவல்லிக்கேணியில் வாழ்ந்த வாழ்க்கை எப்படிப்பட்ட தென்பதை, வாசித்தும் கேட்டும், வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது." என்பது போன்ற குறிப்புகளால் ஒருவாறு ஊகித்துக் கொள்ளலாம். இப்படிப் பேசாத நாட்களையெல்லாம். நாட்களாகக் கருதவில்லை; அவற்றை உயிரீறும் வாள் கண்ாகவே கருதினார். இந்த நிலையில் இருந்தவர், தமது பக்திக் கல்வியின் பயனாகவே, மறந்து றந்துவஞ்சம் மாற்றி ஐம்பு லன்கள் ஆசையும் துறந்து மின்கண் ஆசை யேதொ டர்ந்து நின்ற காயினேன்.5' |மறம்.கோபம்: துறந்து ஒழித்து; நாயினேன். அடியேன்! என்று கூறும் மேலான நிலையை அடைந்திருக்க வேண்டும். சண்டு மறம் என்பது, பிறருக்கு ஒர் ஏற்றம் இருந்தால் அதனைப் பொறுக்கமாட்டாமையும் பிறருக்கு தீங்கு விளைப்பதையே சிந்திக்கையும் ஆகும். இந்த எண்ணத்தை ஒழிக்க வேண்டும் என்கின்றார். வஞ்சமாவது, அநுகூலன் 56. நான். திருவந். 63. 57. திருச். விருத். 98.