பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/226

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்திசாரர் #83 போலத் தோன்றி முடிவில் பிரதிகூலனாய் நிற்றல்; இதனையும் தொலைக்க வேண்டும் என்பது ஆழ்வாரின் வேண்டுகோள். ஐம்புல இன்பங்களில் உண்டாகும் ஆசையை அகற்றி உன் பக்கல் ஆசையே மேன் மேலும் தொடர்ந்து பெருகும்படியான நிலைமையிலேயே நிற் கின்றேன்' என்று தம் நிலைமையையும் தெரிவிக்கின்றார்.

  • நான் பிறப்பதற்கு முன் எம்பெருமான் ஊரகம்" என்ற திருப்பதியில் நின்றான்; பாடகம்" என்ற தலத்தில் உட்கார்ந்திருந்தான்; வெ.கா80 என்ற இடத்தில் சயனத் திருக்கோலத்தில் இருந்தான். இப்போது,

கின்றதும் இருந்ததும் கிடந்ததும் என்நெஞ்சுளே: என்கின்றார். இப்போது என் நெஞ்சைத் திருமலை யாகவும், பரமபதமாகவும் பாற்கடலாகவும் கொண்டு நிற்பதும் இருப்பதும் கிடப்பதுமாகக் காட்சி தரு கின்றான்' என்று பிறிதொரு பாசுரத்தில் தெரிவிக் கின்றார். இதை மேலும் விளக்குவேன். உலகத்தில் ஒருவன் மற்றொருவனுக்குக் கடன் கொடுத்திருந்தால், அக் க ட ைன த் திருப்பி வாங்கிக் கொள்வதற்காகக் கடனாளி வீட்டிலே வந்து கேட்கும்போது முதலில் சிலநாள் நின்று கொண்டே கேட்டு விட்டுப் போய் விடுவான். இதனால் கடன் தீராவிடில் மறுபடியும் வந்து சில நாள் வரையில் திண்னைமீது உட்கார்ந்து கொண்டு 58. ஊரகம்-காஞ்சி உலகளந்த பெருமாள் சந்நிதி. 59. பாடகம்-காஞ்சியில் பாண்டவ தூதன் சந்நிதி. 60. வெ.கா-காஞ்சியில் சொன்னவண்ணம் செய்த பெருமாள் சந்நிதி, 61. திருச். விருத், 64. 62. டிெ. 65.