பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

ஆழ்வார்களின் ஆரா அமுது


கடனை வற்புறுத்தித் திருப்பித் தருமாறு சொல்லிவிட்டுப் போவான். இதனாலும் பலன் இல்லை என்று தெரிந்தால் கடனைத் தீர்த்தாலொழியப் போவதில்லை" என்று படுக்கையாகப் படுத்து வற்புறுத்துவான். இப்படியாகவே எம்பெருமானும் நம்போ வியர் செலுத்த வேண்டிய கைங்கரியக் கடனைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரிடத்தில் நின்று பார்க்கின்றான். மற்றோரிடத்தில் வீற்றிருந்து பார்க்கின்றான். இன்னுமோர் இடத்தில் சாய்ந்து பார்க்கின்றான். திருவூரகத்தில் நிற்கின்றான்; திருப் பாடகத்தில் வீற்றிருக்கின்றான்; திருவெஃகாவில் கிடக் கின்றான். இப்படி நிற்பது இருப்பது கிடப்பதெல்லாம் எம்பெருமான் சம்சாரியான எனக்கு ருசி பிறவாத கால மெல்லாம் என்னிடம் ருசி பிறப்பதற்காக் நின்றான், இருந்தான், கிடந்தான். எனக்கு ருசி பிறப்பித்தல் அவனுக்குச் சாத்தியம் (பலன்); அதற்குச் சாதனம் (வழி) நிற்றல் இருத்தல் கிடத்தல்கள். எம்பெருமானுக்கு அப் பலன் கிட்டிவிட்ட பிறகு திவ்விய தேசங்களில் நிற்றல் இருத்தல் கிடத்தல்களைத் தவிர்த்து, அரவத்து அமளியி னோடும் அழகிய பாற்கட லோடும் அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து.* என்று பெரியாழ்வார் கூறுவது போல் அவ்விருப்புகளை யெல்லாம் எனது நெஞ்சிலே செய்தருளினான்’ என் கின்றார் ஆழ்வார். "ஜம்புலங்களை வெற்றி கொண்டேன்; உடம்பை அடக்கி ஆண்டேன் என்று சொல்லுகின்றவர்கள் உடம்பைக் கொடிய தவங்களாலும் விரதங்களாலும் வாட்டி வதைத்து உடம்பை எலும்புக் கூடாக்குவது அறியாமை என்கின்றார். முதலாழ்வார்களைப் போலவே, அன்பு நெறியைப் - பக்தி 63. பெரியாழ். திரு. 5.2 : 10.