பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/229

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


185 ஆழ்வார்களின் ஆரா அமுது கடல்நிறக் கடவுள் எங்தை அரவணைத் துயிலுமா கண்டு உடல் எனக்கு உருகு மாலோ" என்றாரே தொண்டர் அடிப் பொடி யாழ்வார்; அது போலே கொள்ள வேண்டும், திருமாலே ஐம்பூதங்கட்கு உபாதான காரணம் என்றும், சீவான்மாக்கள் இறைவன் காட்டக் காண்பன என்றும், அவன் கருணையே வடிவானவன் என்றும், உயிர்களனைத்தும் அவனிடமே தோன்றி அவனிடமே ஒடுங்கும் என்றும், மறைகளாலும் அறியப் பெறாத மாயன் அவன் என்றும், மக்களிடையே அவன் பலகால் பிறந்தமை அவன் பேத்துடையவர்க்கு எளியன்’ என்பதை விளக்கு மென்றும், அவனே மூவகைக் காரணமும் ஆவான் என்றும் பலபட இறைவனது பெருமை பலபாடல்களில் பகரப் பெறுகின்றது. காலம் இல்லாமை கருதி அப்பாடல்களை எடுத்துக் காட்டி விளக்கவில்லை. எம்பெருமானின் திருமேனி பரத்துவம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை என்று ஐந்து வகையாகப் பேசப் பெறும். வைகுந்தத்தில் எழுந்தருளி யிருக்கும் இருப்பே பரத்துவம் என்பது. வியூகம் என்பது, வாசுதேவன், சங்கர்ஷணன் பிரத்தியும்நன், அநிருத்தன் என்ற நான்கு நிலைகள். இவை திருப்பாற் கடலில் இருக்கும் இருப்புகள். அவதாரங்கள் விபவம் என்று வழங்கப்பெறும். எல்லோருடைய இதயகமலத்தில் எழுந் தருளியிருக்கும் இருப்பே அந்தர்யாமித்துவம் ஆகும். திவ்விய தேசங்களில் திருமேனி கொண்டு எழுந்தருளி விருக்கும் நிலையும், அடியார்களின் வேண்டுகோளின்படி அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு திருமேனி கொண்டு நிற்கும் நிலையும் அர்ச்சாவதாரம் என்று வழங்கப்பெறும். 67. திருமாலை . 19