பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,苓 கல்லூரியின் முதல் தமிழ்ப் பேராசிரியர் - துறைத் தலைவராகப் பணியேற்றுக் கல்லூரி வளர்ச்சியைப். பெரிதாக்கி தம் வளர்ச்சியையும் வளமாக்கிக் கொண்டவர், இவரிடம் பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கான இளம் ஆசிரியர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர். இக்காலத்தில் இவர் படைத்த பயிற்சி பற்றிய ஐந்து நூல்கள் அர்த்த பஞ்சகம்’ போல் இன்றும் செல்வாக்குடன் திகழ்கின்றன. பைந்தமிழ்ப் பின்சென்ற உச்சைப் பசுங் கொண்டல் திருக்கோயில் கொண்டுள்ள திருமலை திரு அடிவாரத்தில் உருப்பெற்றுத் திகழும் திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் வேங்கடவாணனின் துணை கொண்டு தன் சொந்த முயற்சியால் ஒரேர் உழவன்போல் தமிழ்த் துறையை உருவாக்கி அதைச் சீரும் சிறப்புமாக வளர்த்துத் திருவாக்கிய செம்மல். இவரது திருப்பதி வாழ்வும் (17 ஆண்டுகள்) தமிழ்த் திருத்தொண்டும் பொன்னெழுத்து களால் பொறிக்கப் பெற வேண்டியவை. செம்மாந்த சமயப் பெரு வாழ்க்கையராகிய இப்பெருமகனார் நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் - நம்மாழ்வார் தத்துவம் என்ற தலைப்பை ஆய்வுப் பொருளாக்கிக் கொண்டு ஆங்கிலத்தில் ஆய்வுக் கட்டுரையை உருவாக்கி டாக்டர் பிஎச். டி) பட்டம் பெற்று வேங்கடவன் திருவருளையும் நிறையப் பெற்றவர். இத்தகைய பெருமையைப் பெற்ற இப்பேராசிரியப் பெருமகனார் படைத்த இப்பக்திப் பனுவல் பல சிறப்பு களைக் கொண்டது. நயம், நடை, உவமை, மேற் கோள், வைண சமயக் கருத்துகள், பொதுக் கருத்துகள், சொற் பொருள் விளக்கம், ஐயத்தைத் தெளிவுபடுத்துதல்ஆகிய எட்டு வகைகளில் இந்நூலின் உயிரோட் டத்தைக் காணலாம். வைணவ சமய உயிரோட்டத்தின் அடக்கமும் எட்டெழுத்தில் தானே உள்ளது: