பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/232

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பக்திசாரர் 1.8% திருஇருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய் கருஇருந்த நாள் முதலாக் காப்பு. * |நெடுமால் . நாராயணன்; திரு - இலக்குமி, சிரீதரன் - இலக்குமியை மார்பில் தரித்தவன்; ஆளாய் . அடிமையாய்! என்ற பாசுரம் இதனைத் தெரிவிக்கின்றது. இன்னொரு. பாசுரத்திலும், நான் உன்னை அன்றிஇலேன், கண்டாய் நாரணனே எேனை அன்றி இலை.” என்று மீண்டும் இக்கருத்தையே வற்புறுத்துவதைக் காண லாம். இதனை ஒரு காவாக்கியம் என்றே சொல்லலாம். சநம்மை விட்டு அவனால் பரிபூரணனாயிருக்க முடியாது: என்ற இந்தக் கொள்கையைப் பக்த கோடிகளின் ஒரு மகா சாசனம் என்றும் சொல்லி வைக்கலாம். இதை ஒரு நூற் பாவாகக் கொண்டு எவ்வளவு பெரிய உண்மையை எவ்வளவு எளிதாக நினைவுபடுத்திக் கொள்ளமுடிகின்றது! இந்த இறைவனை அடைதலையே வீடுபேறு - மோட்சம் - என்று கருதுவர் வைணவப் பெருமக்கள். வைணவ தத்துவப்படி இறைவனே தன்னை அடைவதற்கு வழியாகவும் அமைவான்; பலனாகவும் இருக்கின்றான். இதனை, - வீடு ஆக்கும் மெய்ப்பொருள்தான் வேத முதற்பொருள்தான் விண்ணவர்க்கு நற்பொருள்தான் நாராயணன். 8 (மெய்ப்பொருள் - உண்மையான வழி) 71. நான். திருவத். 92 72. டிெ. 7 73. டிெ.13